பல நாள் கனவு நினைவு ஆனது போல இருக்கிறது இந்த அறிவிப்பு. .
ஆமாம். . பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த incredible படத்தின் தொடர்ச்சி இப்போது வரபோகிறது.. இந்த செய்தி வெளியான உடனே Twitter ல் trend ஆனது. . இதிலே தெரிந்து கொள்ளலாம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை. ..
அனிமேஷன் படம் , சூப்பர் ஹீரோ படம் என சாதாரணமான விஷயம் தான். . அப்புறம் எப்படி படம் வெகுவாக கவர்ந்தது. ..
சிம்பிள். .. படம் அப்படியே நம்ம வீட்டு குடும்பத்தை பிரதிபலித்தது..
பிரச்சினையை தேடி போய் மாட்டி கொள்ளும் அப்பா , அவரை திட்டிகொண்டே இருந்தாலும் கணவனை விட்டு கொடுக்காமல் காப்பாற்ற போராடும் மனைவி , அப்பா அம்மா கன்டிஷன் களால் காண்டாகும் மகள். . அவளை வெறுப்பேற்றுவதையே தொழிலாக இருக்கும் மூத்த மகன் , இந்த சண்டையை ரசிக்கும் கடைசி குட்டி பாப்பா. ...
இப்படி ஆரவாரமாக ஆரம்பித்து முடிந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறேன் ....
No comments:
Post a Comment