Thursday, 14 April 2016

திரைக்கதை டிப்ஸ் - #3


இந்தமுறை ஒரு கதாபாத்திரத்தை எப்படி சுவாரஸ்யமாக அமைக்கலாம் என பார்க்கலாம்…

சினிமாவில் மட்டும் தான் , மக்கள் காசு கொடுத்து உள்ளே வந்து தான் நினைத்தது எதுவும் நடக்கக்கூடாது என ஆசைப்படுவார்கள்… அவர்கள் நினைத்த எல்லாம் நடந்தால் “ யூகிக்க கூடிய திருப்பம் , அடுத்ததை குழந்தை கூட சொல்லி விடும்” என விமர்சனங்கள் பறக்கும்…

இதை தவிர்க்க , ஒரு சீனை முற்றிலும் மாறுபட்ட ரீதியில் எடுக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அந்த கதாபாத்திரம் , இயல்பு நிலையில் இருந்து சற்றே விலகி இருந்தால் ( கவனம் : லாஜிக் பார்த்து ) பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.. சீக்கிரம் படத்தில் ஒன்றி விடுவார்கள்..

உதாரணமாக , கொம்பன் படத்தில் வந்த கார்த்திக்கும் , பருத்திவீரன் படத்தில் வந்த கார்த்திக்கும் ஏறத்தாழ ஒரேமாதிரி குணாதிசயம் இருக்கும்.  அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் கதாபாத்திரம் படைக்கபட்டிருக்கும்.. அதற்கு நிறைய  பில்ட்அப் சீன் தேவை.. அதுவே மெட்ராஸ் பட காளி யாக வந்த கார்த்திக் எப்படி ? மிக சாதாரணமாக ஒரு பாடலின் நடுவே என்ட்ரி கொடுப்பார்.. ஆனாலும் மறக்க முடியவில்லை தானே…!! அந்த கதாபாத்திர வடிவமைப்பு அப்படி.. நல்ல ரிச்சான பையன் போன்ற தோற்றம்… ஆனால் பேசுவதோ ‘ சும்மா நேத்துக்கு சுவரயே பாத்துகினு கீர ?’என்று… முரண்பாடு இருந்ததால் நம்மை அறியாமலும் ஒன்ற முடிந்தது…

அதேபோல் ஜோக்கர்… !!! குழந்தைகள் ரசிக்கும்படியாக முகத்தில் வர்ணம் பூசியபடி வித்தியாசமான உடல்மொழியோடு ஒரு கதாபாத்திரம்… அவன் சைக்கோதனமாக கொலை செய்யும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.. சரி , அவன் கெட்டவன் என நினைக்கும் போது , அவன் பேசும் வசனங்கள் அனைத்தும் தத்துவங்களாக இருப்பது மேலும் அதிர்ச்சி… இப்படி ஆடியன்ஸ் எதிர்பார்த்ததை கிளிஷேவாக கொடுக்காமல் வித்தியாசம் காட்டியதால் ஜோக்கர் அழிக்கமுடியாத கதாபாத்திரம் ஆகிவிட்டது…

உங்கள் திரைக்கதையிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரமாவது இப்படி அமைப்பது , ஆடியன்ஸிற்க்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்.

Wednesday, 13 April 2016

திரைக்கதை டிப்ஸ் #2


புதிதாக திரைக்கதை எழுதுபவர்களின் பெரும்பாலான சாய்ஸ் , திரில்லர் டைப் தான்.. அல்லது காமெடி , காதல்... நாம் பொதுவாக செய்யும் தவறு , கதாபாத்திரங்களுக்கு பிண்ணனி , அழுத்தத்தை உருவாக்காமல் விட்டுவிடுவது.. அதாவது படம் தொடங்கி பத்தாவது நிமிடத்தில் ஆடியன்ஸ் , முக்கிய கதாபாத்திரத்தோடு ஒன்றி விட வேண்டும். அது அழுதால் இவர்களும் அழ வேண்டும்... அப்படி...

இங்குதான் பலரும் தடுமாறும் கட்டம்... உணர்வுபூர்வமாக எழுதாமல் , கடனே என்று ஒரு காதல் , மோதலை அமைப்பது.. இதனால் ஆடியன்ஸ் படத்தோடு  ஒன்றாமல் செல்போனை பார்க்க வைத்துவிடுகிறோம்..

இதனை தவிர்க்க , இதுவரை நீங்கள் பார்த்த கேட்ட சம்பவங்களில் இருந்து உணர்வுபூர்வமான முடிச்சுகளை  அமையுங்கள்.. கவனம் .. அது உங்களுக்கு மட்டும் அல்ல , பல பேரும் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளாக இருப்பது அவசியம்..

உதாரணம் :-

1. ஒரு கப்பல் , பனிபாறையில் மோதி மூழ்குகிறது. ஹீரோ தப்பிகிறான் என்பது பழசு.. ஏழை இளைஞன் , நிச்சயிக்கப்பட்ட பணக்கார ஹீரோயினை காதலிக்கிறான். காதல் கைகூடும் போது கப்பல் மூழ்கி காதலன் இறக்கிறான்.. இது உணர்வுபூர்வமாக டச் செய்யும். (Titanic)

2. டைனோசர் உயித்தெழுவது , தட்டையான திரைக்கதை. சிறுவர்களை வெறுக்கும் மனிதனும் , சிறுவர்களும் டினோசர்களிடம் மாட்டி தப்பிப்பது புதுசு.( jurassic park -1 )

3. பண்டோரா கிரகத்தின் மீது மனிதர் படையெடுப்பு , தட்டை... மனிதனாக , அவர்களுக்கு எதிரணியிடமும் நாவியாக ஒரு காதலனாகவும் இருப்பவன்... புதுசு..( avatar )

இன்னும் பல உண்டு... ஒரு மூன்றாவது நபராக நினைத்துக்கொண்டு உங்கள் திரைக்கதையை படியுங்கள்.. இப்போது உங்களை நீங்களே கேளுங்கள் .. இதில் உணர்வுபூர்வமான முடிச்சு உண்டா ?

தொடரும்...

Monday, 11 April 2016

திரைக்கதை டிப்ஸ் - #1

இந்த பதிவில் , துணை கதாபாத்திர வடிவமைப்பை பற்றி பார்க்கலாம்.

நாம் துப்பறியும் கதையோ , காதல் கதையோ எதுவாயினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்போம். ஆடியன்ஸின் கவனம் , அந்த முக்கிய கதாபாத்திரத்தில் தான் இருக்கும்.. திடீரென அந்த கதாபாத்திரம் எதாவது சிக்கலான முடிச்சுக்கு விளக்கம் அளிக்கும்போதோ அல்லது முக்கியமான விஷயத்தை சொல்லும் போதோ ஆடியன்ஸிற்க்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது…

அதாவது , எப்படி அந்த கதாபாத்திரம் சரியான முடிவு எடுத்தது என்று … அதை தவிர்க்க அந்த முக்கிய கதாபாத்திரத்துடன் ஒரு துணை கதாபாத்திரம் உருவாக்கப்படும்.. இந்த துணை கதாபாத்திரம் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் தன்மைகொண்டதாக இருக்கும்… ஆடியன்ஸ் மனதில் இருக்கும் சந்தேகங்கள் , இந்த துணை கதாபாத்திரம் வாயிலாக கேட்கப்பட்டு முக்கிய கதாபாத்திரம் வாயிலாக பதில் அளிக்கப்படும். இதனால் ஆடியன்ஸிற்க்கு தெளிவு ஏற்படும்... இதை அதிகமாக வைத்தால் ‘ ஓவர் டோஸ்’ ஆகிவிடும் ஆபத்து உண்டு… தேவையான இடத்தில் பயன்படுத்துவது நல்லது.

அடுத்த பதிவில் சுவாரஸ்யமான கதாபாத்திரம் அமைப்பது பற்றி பார்க்கலாம்

தொடரும்….

Wednesday, 30 March 2016

Batman vs Superman : dawn of justice விமர்சனம்

Batman vs Superman : dawn of justice

Warning : spoiler alert…..

இன்றைக்கு தான் இந்த படத்தை பார்த்தேன். பலரும் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள்.. அதனால் சந்தேகத்துடன் தான் இருந்தேன். ஆனால் அவர்களின் விமர்சனங்களுக்கு வந்த கமெண்டுகள் பாஸிட்டிவ்வாக இருந்ததால் , நம்ம தல பேட்மேன் கை விட மாட்டார் என நினைத்து சென்றேன்.. இனி படத்தை பற்றி பார்க்கலாம்....

இந்த படம் தெளிவாக புரிய வேண்டும் என்றால் , டி.சி காமிக்ஸ் ரசிகராக இருக்க வேண்டும்.  குறைந்த பட்சம் ‘ மேன் ஆஃப் ஸ்டீல்’ படத்தை பார்த்திருக்க வேண்டும். பார்காதவர்களுக்கு அக்கதையின் சுருக்கம்…

கிரிப்டான் கிரகம் அழியும்போது கால்-எல் எனும் சூப்பர்மேன் , குழந்தையாக பூமிக்கு அனுப்பி வைக்க படுகிறார். இங்கே மார்த்தா என்பவரால் கண்டெடுக்கபட்டு ‘கென்ட்’ ஆக வளர்கப்படுகிறார்.. ஒரு விபத்தால் வளர்ப்பு தந்தை இறந்துவிடுகிறார். அப்போது தான் , தான் யார் என்று கென்டிற்க்கு புரிகிறது. சூப்பர்மேனாக மாறுகிறார். பத்திரிகை நிருபரான ‘லூயிஸ்’உடன் காதலும் வருகிறது. .  அதே நேரம் அழிந்த கிரகமான கிரிப்டானில் இருந்து ‘ஜெனரல் சாட்’ பூமிக்கு வருகிறான். பூமியை அழித்து , புது கிரிப்டான் கிரகமாக மாற்றும்போது , சூப்பர் மேன் வந்து காப்பாற்றுகிறார்.. இந்த சண்டையில் பல கட்டிடங்கள் சேதமடைகிறது . மக்கள் , தெறித்து சாலையில் அங்குமிங்கும் ஓடுகிறார்கள்.. பல பேர் இறக்கிறார்கள்.. இறுதியில் சாட் இறப்பதோடு படம் முடிகிறது…

நாம் மேலே பார்த்த முதல் பாகமான ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ ன் கிளைமாக்ஸில் இருந்து இரண்டாம் பாகமான ‘ பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்’ படம் தொடங்குகிறது..

கிளைமாக்ஸில் மக்கள் தெறித்து ஓடும்போது , அவர்களுடன் ‘புரூஸ் வெயின்’ம் ஓடுகிறார்… புரூஸ் வெயின் , பகலில் ஒரு பணக்கார பிசினஸ்மேன் ஆகவும் , இரவில் பேட்மேனாகவும் வலம் வருபவர்… அந்த வில்லன் சாட் , உலகை அழித்திருந்தால் கூட இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது… சூப்பர்மேன் , உலகை காப்பாற்றுகிறேன் என்று ‘ யூ டர்ன் பண்ணி , டேபிள உடைச்சி , மூக்க நொறுக்கி’ அதகளம் செய்வதை பார்த்த பேட்மேன் (புரூஸ் வெயினிற்கு) கோபம் வருகிறது… சூப்பர்மேனாக இருப்பது போக மற்ற நேரங்களில் ‘கிளார்க் கென்ட்’ஆக பத்திரிகை நிருபர் வேலை பார்க்கும் சூப்பர்மேனிற்க்கு , பேட்மேனை பிடிக்க வில்லை… ஹீரோ என்ற பெயரில் ரவுடித்தனம் செய்வதாக நினைக்கிறார்… இப்படி லேசான உரசல் , பெரும் மோதலாக மாறுகிறது…

லெக்ஸ் லூதர் என்ற தனியார் ஆயுத வியாபாரி , தொடர்ந்து சூப்பர்மேனிற்க்கு எதிராக மக்களை திருப்பி விடுகிறான்.. ஒரு கட்டத்தில் சூப்பர்மேன் தான் , தனக்கான எதிரி என்று பேட்மேன் முடிவு செய்து , லெக்ஸ் லூதரிடம் இருந்த கிரிப்டான் கல்லை திருடுகிறார்… இதனிடையில் ‘பிரின்ஸ்’ என்ற பெண்ணின் மர்மமான நடவடிக்கையும் பேட்மேன் கவனிக்கிறார்.. பேட்மேன் , சூப்பர் மேன் சண்டை மூட்டி கொண்டாலும் அதனை இன்னும் வலுவாக்க ‘ டூம்ஸ்டே’ என்ற ஏலியனை லெக்ஸ் லூதர் உயிர்பிக்கிறான்.. இந்த ஏலியன் , சூப்பர்மேனுக்கு  நிகராக சக்தி வாய்ந்தது… சூப்பர் மேனின் தாயை கடத்தி , பேட்மேனை கொல்லும் படி சூப்பர்மேனை நிர்பந்திக்கிறான் , லெக்ஸ் லூதர்… சூப்பர்மேனும் பேட்மேனும் சண்டையிட்டு இறுதியில் லூயிசின் தலையீட்டால் ஒன்றுசேர்ந்து டூம்ஸ்டே வை அழிக்க போராடுகிறார்கள்… அப்போது பிரின்ஸ் என்ற பெயரில் உலவிய ‘ வொன்டர் வுமன்’ உதவி கிடைக்கிறது… வொன்டர் வுமனும் அழிவில்லா ஆற்றல் பெற்றவர்.. முடிவில் டூம்ஸ்டே இறக்கிறது. கூடவே சூப்பர்மேன் இறக்கிறார். லெக்ஸ் லூதர் சிறையில் அடைக்கபடுகிறான்.. சூப்பர்மேனின் இறுதி சடங்கு முடிந்து எல்லாரும் சென்றபிறகு , அவருக்கான சக்தி திரும்பவருவதாக ஒரு நொடியில் காட்டி படம் முடிகிறது..அடுத்த பாகமான ‘ ஜஸ்டிஸ் லீக்’ ற்காக…

படத்தின் முக்கிய  நிறைகளை முதலில் சொல்லி விடுகிறேன்.. சந்தேகமில்லாமல் பேட்மேனாக நடித்த பென் அஃ ப்ளிக்.. !!! மற்றும் படத்தின் பிண்ணனி இசை ‘  ஹன்ஸ் சிம்மர் ‘ … வசனங்கள்.... சூப்பர்மேனை பார்த்து "உனக்கு ரத்தம் வருமா ?" என்று பேட்மேன் கேட்கும் இடம் ... அதற்கு சூப்பர்மேன் நக்கலாக சிரித்தபின் கிளைமாக்ஸில் முகத்தில் கீறி இரத்தம் வர வைப்பது பக்கா கமர்ஷியல்... செம கிளாப்ஸ் .. அதைவிட தோட்டாவால் கூட துளைக்க முடியாத இரும்பு மனிதனான சூப்பர்மேனை , பேட்மேன் பிளாக் செய்யும் காட்சி என பேட்மேன் தான் படம் முழுக்க நிறைகிறார்.. சூப்பர்ஹீரோக்களையும் மனித உணர்சிகளோடு காட்டியது அருமை...

படத்தின் நீளம் மிகப்பெரிய குறை .. கிட்டத்தட்ட  2.30 மணி  ஓடுகிறது.. தமிழ்படங்களே 2.00 , 2.15 என குறுகும் போது ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கு இது அதிகம்… படத்தின் கிராபிக்ஸ் பட்டையைக் கிளப்பினாலும் , கிளைமேக்ஸ் சண்டை ஒளிவெள்ளதால் ஒன்றுமே புரியவில்லை.. அதேபோல் திரைக்கதை சூத்திரங்களுக்கு உட்பட்டு இடைவேளை அமைந்ததா என தெரியவில்ல.. சூப்பர்மேன் கோர்ட்டுக்கு வரும்போது இடைவேளை விட்டார்கள். ஒருவேளை நான் பார்த்த திரையரங்கு கோளாறா புரியவில்லை… கதையின் உச்சகட்டம் இடைவேளையாக வந்தால் முன்பாதி சோர்வு போயிருக்கும்… அதிகமாக கனவு காட்சிகள் வைத்தாலும் ஆடியன்ஸ் கடுப்பாவது உறுதி.. இதில் மூன்று இடத்தில் கனவு காட்சி… நாமும் ஏதோ பிரச்சினை என்று சீரியஸாக பார்க்கும்போது , தடார் என்று கதாபாத்திரம் எழுந்திருக்கும் போது , நமக்கு ‘புஸ்ஸ்ஸ்’ ஆகிறது…

மற்றபடி ‘உட்காறவே முடியல , ரொம்ப ஸ்லோ ‘ என்று இல்லை… நிச்சயமா ஒருமுறை பார்க்கலாம்…

Wednesday, 16 December 2015

பீப் சாங் - ஒரு பின்நவீனத்துவம்

அட ... என்ன மிரண்டுடீங்களா... அது ஒன்னுமில்லை. இப்படி புரியாத வார்த்தைல குழப்பி விட்டா தான் , இனி நான் எழுத போறத கம்முனு படிப்பாங்க.  என்ன பெரிய அறிவாளி னு நினைப்பாங்க.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி , "நல்லவர் சிம்பு" வும் , ஒரு அப்பிராணியும்  ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பாடலை உருவாக்குனாங்க..

தனுஷுக்கு ஒரு கொலவெறி பாட்டு மாதிரி , தனக்கு ஒரு பீப் சாங் (முன்னது சூப் சாங் ) வேணும்னு போட்டிருப்பாப்ள ... ஆனா விதி , பூமாராங் மாதிரி சுத்திகி னு வந்து பின்னாடி அடிச்சிடுச்சி... அடிச்சாங்க பாரு அந்தர் பல்டி... " எனக்கும் இந்த பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை " னு அனிருத் சொல்ல  , " பாஸ்.. பாஸ்.. இத்தன வருசம் ஒண்ணா பழகிட்டு விட்டுட்டு  ஓடுறீங்க பாத்தீங்களா" னு டி.ஆர் வந்து அனிரூத்த கோத்து விட , சிம்பு "கடவுள் என்னை காப்பாத்துவார்" னு டிவிட் போட .... ஒரே கூத்தா இருந்துச்சி  ...

இதுல எனக்கு என்ன கோவம் னா , இந்த ரசிகர்கள் மேல தான். . இனி சில வசை சொற்கள் வரும் கண்டுக்காதீங்க...

டேய்.. பண்ணாட பசங்களா ... சிம்பு என்ன உலகமகா தத்துவத்தையா பாடினான் ? ஐ சப்போர்ட் சிம்பு னு சொல்லிட்டு , மாதர் சங்கத்த கிண்டல் பண்றியே... ஏண்டா நாயே.. உங்க அம்மா , சகோதரிலாம்  மாதர் தாண்டா..

இதுல , இந்த பாடல எதிர்கரவனை பாத்து ஒரு கேள்வி வேற கேக்குறானுங்க.. " நீ ஒழுக்கமா ?" னு.. இதுக்கு பயந்துக்கிட்டே இப்போ எவனும் இப்போ எதிர்க்கல.. சில விஷயம் லாம் மறைவா இருந்தா கண்டுக்கமாட்டாங்க.. அது இயற்கை.  அது எல்லாருக்கும் காட்டுனா , திட்ட தான் செய்வானுங்க.. நாலு சுவத்துகுள்ள பண்றத , நீ நடுரோட்டில பண்ணுவியா ? 

"எல்லாரும் பண்றது தானே ? இப்போ ஏன் நல்லவன் மாதிரி நடிக்கிறீங்க? " னு கேட்டு பாரு. செருப்பால அடிப்பாங்க... அவன் தான் அப்படி பாட்டு பாடுனான் னா , நீ என்னமோ வெண்ணவெட்டி மாதிரி கிளம்பி வர..?

ஏன் இவ்ளோ கோபப்படுறேன் னா , இப்போ தான் இளைஞர் சக்தி , அது இது னு சொன்னாங்க. . இல்ல.. நாங்க பொரிக்கி னு நிரூபிச்சிட்டாங்க..

Tuesday, 15 December 2015

அமெரிக்கா டூ சைதாப்பேட்டை - கடைசி பாகம்

கடைசி பாகம். ...

பயம் , துரோகம் என எல்லா உணர்வுகளும் குழம்பிய நிலையில் இருந்தாள் கேத்ரின். .. அந்த பெட்டியினுள் இருந்த ஆவணம் , அவளது மொத்த நம்பிக்கையையும் புரட்டி போட்டது. . அந்த உணர்வு தாளாமல் தான் அப்படி கத்தினாள். .. அந்த பயம் உணர்வே அவர்களை இன்னும் இக்கட்டில் மாட்ட வைத்தது. ..

அவள் போட்ட சத்ததில் , பக்கத்து ரூமில் இருந்து ஆட்கள் கதவருகில் வந்து விட்டனர் ... குமார் சாவி துவாரம் வழியாக பார்த்தான்..

"அடக்கடவுளே. .. அதே ரவுடிகள் ..!! சிம் கார்டை உடைத்த பின்னும் எப்படி வருகிறார்கள் ? ஒருவேளை , நான் அங்கே சென்று வெயிட் பண்றேன்னு சொன்னது இங்கே தானா..? எங்களோட திட்டம் , இவங்களுக்கு எப்படி தெரியுது ? " பல எண்ணங்கள் குமாரின் மனதில் அலைமோதின...

"குமார். .. உன் கிட்ட ஒரு அதிர்ச்சியான  உண்மை சொல்லனும்.."

"அப்புறம் பேசலாம் கேத்ரின். .. இப்போ பெரிய பிரச்சினையில மாட்டிகிட்டோம் " என்றவாறே கீழே தரையை பார்த்தான்...

அந்த தீ விபத்தின் போது , கதவருகில் ஏதோ வெடித்து தரையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. . கீழ்தளம் தெரியும் அளவிற்கு ஹோட்டல் நிர்வாகம் அதை உடைத்து , தற்காலிகமாக அதன்மேல் மரப்பலகைகளை வைத்து மூடி இருந்தனர். . இதைபார்த்ததும் சரேலென ஒரு யோசனை குமாருக்கு உதித்தது...

" கேத்ரின். .. வெளியே அதே ரவுடிகள் எப்போ வேணாலும் கதவை உடைச்சிகிட்டு உள்ளே வரலாம். . இந்த மரப்பலகைய எடுத்துடுவோம் .. எப்படியும் வாட்டசாட்டமான ஆளுங்க தான் முதல்ல உள்ள வருவாங்க.. இந்த குழிக்குள்ள அவங்க விழுந்ததும் , கடைசியா இருக்குற ஆளுங்கள நாம சமாளிக்கலாம் " என்றான். . மரப்பலகயை எடுத்து ஓரம் போட்டனர்... இவ்வளவும் சில நொடிப்பொழுதில் நடந்தேறியது. ..

இருவரும் கதவின் இரு ஓரங்களில் மறைந்து நின்றனர்... கதவை சில பேர் வேகமாக முட்டி தள்ளுவது தெரிந்தது. . இன்னும் சில நொடிகள் தான். . உள்ளே வந்துவிடுவார்கள். ..

"குமார். .. தயவுசெய்து கேளு... உன் கிட்ட அந்த உண்மையை சொல்லனும் "

" ஷ்ஷ்ஷ்"

சில நொடிகள் அமைதியாக இருந்தது. .

" டமாமார்ர்ர்....."

கதவை உடைத்து கொண்டு வெறித்தனத்துடன் பாய்ந்தனர் ரவுடிகள். .. முதலில் ஓடிவந்த 7 பேரும் தலைகீழாக கீழ்தளத்தில் விழுந்தனர். . வெளியில் நின்றிருந்த 2 சுமாரான ரவுடிகளை அடித்து பள்ளத்தில் தள்ளினான் குமார்...

" கேத்ரின். .. சீக்கிரம். . இந்த மரப்பலகைய வச்சி பள்ளத்த மூடு... நாம ஐன்னல்  வழியா இறங்கி வெளியே போயிடுவோம் "  ...

குமாரும் கேத்ரினும் வேகவேகமாக பள்ளத்தை மூடிவிட்டு ஜன்னல் அருகே ஓடினார்கள். . மீண்டும் கதவருகே யாரோ வந்தனர். .. தொடங்கியதை பாதியில் விட்டு விட்டு போக கூடாது.. வருபவனாலும்  பிரச்சினை வரலாம் என்று எண்ணி , கேத்ரினை பெட்டிக்கு அருகே ஒளியவைத்து விட்டு , சற்று தள்ளி அவனும் ஒளிந்து கொண்டான்..

" குமார். ....."

" கேத்ரின். . ஷ்ஷ்ஷ். . கொஞ்சம் அமைதியாக இரு.." மெல்லிய குரலில் எச்சரித்தான் குமார். .

இதற்குள் அந்த மனிதன் உள்ளே வந்து விட்டான்...

" கேத்ரின். .. நான் தான் மா , லாரன்ஸ் மாமா. .. எங்கமா இருக்க ? "

குமார் ஆசுவாச பெருமூச்சு விட்டான். .. வந்தவர் எதிரி இல்லை என தெரிந்ததும். . பெண்ணின் மீது உள்ள பாசத்தால் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்  போல... என்று நினைத்தவாறே எழுந்தான். ..

" சார்... நாங்க இங்க இருக்கோம். .. சீக்கிரம் இங்க வந்து மறைஞ்சி நில்லுங்க. .. இங்க ரவுடிகள் இருக்...."

" குமார். .. வேண்டாம். . போகாதே. .." அவன் சொல்லி முடிப்பதற்குள் கேத்ரின் கத்தினாள். ..

குமார் குழம்பியவாறே நிற்க...  லாரன்ஸின் பாக்கெட்டில் இருந்து ஒரு புதிய ரக பிஸ்டல் குமாரின் நெஞ்சை குறிபார்த்தது ...

" டுமீமீல்ல்ல்....."

குமார் அப்படியே பின்பக்கம் சரிந்தான்..கேத்ரின் கதறியபடி ஓடி வந்து அவனை தன் மடியில் தாங்கினாள்...

சில நொடிகளில் மரணம் தன்னை தழுவ போகிறது " என்பதை உணர்ந்தான் குமார்...

"ஏன் மாமா இப்படி ?? உங்கள எவ்வளவு நம்பினோம் மாமா ? ஏன் இந்த துரோகத்தை செய்தீங்க ? "கேத்ரின் கதறினாள். ..

" ஹாஹாஹா. ...கேத்ரின்...!!!
.
சாகறதுக்கு முன்னாடி உண்மைய தெரிஞ்சுகிட்டு சாகு....!!
.
.
.
.
எனக்கு நீங்க பண்ண துரோகம் அப்படி ... உன் அப்பன் ரிச்சர்ட் , தொழில் தொடங்கியதலிருந்து நான் அவன் கூட இருக்கேன். . ஆனா எனக்கான மரியாதை அவன்  தந்ததே இல்லை. . நான் பாடுபட்டு உழைப்பேன் .. அவன் பேரு வாங்கிட்டு போவான். ..அதன் உச்சகட்டமாக என்னை உங்க வீட்டில் ஒரு அடிமை மாதிரி தானே நடத்துனீங்க... உன்னை வளக்கரதுக்காக நான் மட்டமாக்க பட்டேன்..இதிலிருந்து நான் விடுபட ஒரே வழி ..,

உன் அப்பாவை கொல்றது தான்..

அதுக்கு முன்னாடி அவனுக்கு தெரிஞ்ச எல்லா கம்பெனி டீட்டெயிலும் எனக்கு தெரியனும்.. அதெல்லாம் இதோ இந்த சீக்ரெட் லாக்கரில் தான் இருக்கு... அதை திறக்க ரிச்சர்ட் வேண்டும். ... இந்த லாக்கர் அவன் எதிரில் வந்ததும்  படம் பிடிக்கும் - அப்புறம் அவனோட கை அச்சு பிரதி - அப்புறம் அவனோட கண்விழி ஸ்கேனிங். . இதெல்லாம் இருந்தாதான் இது திறக்கும். .

அதுக்காக தான் இந்த ஊரில் ஒரு கான்பிரன்சிங் மீட்டங் அரேஞ்ச் பண்ணி , அவனை வர வச்சேன். .. இரவு நேரம் அவனை இந்த லாக்கரை ஓப்பன் பண்ணா சொன்னா முடியாது னு சொல்லிட்டான்... என் ஆத்திரம் தீர அவனை அடிச்சி கொன்னேன்...

ஹாஹாஹா. ...

ஆமாம் கேத்ரின். .. இந்த கையால தான் உன் அப்பா இறந்தான். ..

ஆனா நான் பண்ண இரண்டு தப்பு... டீடியல்ஸ்  தெரிவதற்கு முன்னாள் அவனை கொன்னது. . இன்னொன்னு , அந்த லாக்கருக்கு எதிரில் அவனை கொன்னது.. அந்த லாக்கர் , நான் அவனை கொன்னதை படம் எடுத்து சேவ் பண்ணிடுச்சி ... அதற்குள் ஆளுங்க வந்ததால் Fier accident மாதிரி நினைக்கனும் னு , இந்த இடத்திற்கு தீ வச்சிட்டு நான் நியூ ஜெர்சி வந்துட்டேன். . இந்த லாக்கர் நெருப்பால் பாதிக்கப்படாது. . அந்த தைரியத்தில் தான் உங்களிடம் வந்தேன்.. இருந்தாலும் நான் கொலை செய்த போட்டோ இந்த லாக்கரில் இருக்கே..

அதை எடுக்கனும்.. கேத்ரின். .. நான் தப்பிச்சே ஆகனும்.. ஆனா இந்த லாக்கரை அதன் இடத்திலிருந்து அசைச்சா , அது அதனுல் இருக்கும் முக்கிய ஆவணங்களை எல்லோருக்கும் மெயில் அனுப்பிடும் .. அதை உடைக்காமல் திறக்க வேண்டிய கட்டாயம்.. இதுக்கு இருந்த ஒரே சாவி.... உன் அப்பா.. அவனும் உயிரோடு இல்லை. . அப்புறம் தான் தெரிஞ்சது , இதனோட மாற்று சாவி நீ தான்...

எஸ்... கேத்ரின். .. நீ தான் எனது துருப்புச் சீட்டு. . !!

உன்னை நியூ ஜெர்சி ல இருந்து இங்க கொண்டு வர முயற்சி பண்ணேன்.. வீட்டுல வேண்டாம் னு தடுத்துட்டாங்க .. அதனால தான் சீனா ல நடக்குற காம்படீஷன் கு நீ செலக்ட் ஆகிட்டனு பொய்யாக ஒரு மெயில் அனுப்பினேன்... உன்னை தூண்டி விட்டேன். . நான் நினைச்ச மாதிரி நீ தமிழ்நாட்டுக்கு வந்த. ..

உன்னை கடத்தி , எனக்கு செய்ய வேண்டியத முடிச்சதும் உன்னை கொல்ல ஒரு லோக்கல் ரவுடிய செட் பண்ணேன். .. உன் அதிர்ஷ்டம். . இதோ செத்துகிட்டு இருக்குரவன் உன்னை தொடர்ந்து காப்பாத்தினான்... இப்போ எல்லாம் முடியபோகுது கேத்ரின். .."

ஹாஹாஹா. ... என சிரித்துக் கொண்டே டிரிக்கரை அழுத்தினான்.. கேத்ரின் , குமாரை பிடித்து கொண்டு கண்களை இருக மூடினாள் ....

ட்ட்ரிரிக்க்க்.............

பிஸ்டல் லாக் ஆகி டிரிக்கர் ஜாம் ஆகி விட்டது. . அதை சரிசெய்ய லாரன்ஸ் முயன்றான்... இதுதான் சமயம் என , வேகமாக எழுந்த கேத்ரின் , லாரன்ஸை கீழே தள்ளி பிஸ்டலை பிடுங்கினாள் .....

" குட் பை மாமா..."

டுமீமீல்ல்ல். ...

லாரன்ஸ் வயது முதிர்ச்சி காரணமாக , துப்பாக்கி குண்டின் வலியை தாளாமல் சரிந்தான். ..

கேத்ரின் , குமாரை தூக்கி தன் மடியில் தாங்கினாள். . இருவராலும் பேச முடியவில்லை. . மெதுவாக மிக அழகாக அவர்களுக்குள் பூத்த காதல் அந்த நொடியில் சேர முடியாத வலியை உணர்ந்தது  .. கேத்ரின் அவன் காதருகில் சென்றாள்...

" குமார்.... என்னால தான் உனக்கு இந்த நிலமை ..என்னை மன்னிச்சுடு. .. லாரன்ஸ பத்தி எச்சரிக்க தான் உன்னை கூப்பிட்டேன். . நீ அதை கவனிக்கல. .. உன் குடும்பத்தை இனி நான் பாத்துக்கறேன்.... உன் கிட்ட நான் சொல்லனும் நினைச்சது....

I love you kumar. ... yes , I love you so much....

இதைகேட்டுக்கொண்டே குமாரின் தலை சரிந்தது... பல வருடங்கள் விசுவாசமாக இயங்கிய இதயம் அன்றோடு தன் துடிப்பை நிறுத்தியது ...குமாரின் மூச்சும் அடங்கியது. . அவனை அள்ளி எடுத்து தன் மார்போடு அனைத்து கதறினாள் கேத்ரின். ..

" ஹாஹாஹா. ..."

திடுக்கிட்டு திரும்பினாள்  கேத்ரின். .. அரைகுறை உயிரோடு இருந்த லாரன்ஸ் , தான் விழுந்த இடத்தில் இருந்த எரியாத துணி , பேப்பரை ஒன்று சேர்ந்து பற்ற வைத்தான்... அதை ரூம் எங்கும் விசிறி அடித்தான். அறை எங்கும் நெருப்பு பரவியது.

"என் சாவு ... சாதாரணமாக இருக்காது கேத்ரின். ." என்று சொல்லியவாறே சரிந்தான் லாரன்ஸ். .. குமாருடைய பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து கொண்டு ஜன்னல் அருகே ஓடினாள். .. அதில் அவனுடைய வீட்டு முகவரியுடன் கூடிய ஆவணங்கள் இருந்தன... ஜன்னல் வழியே குதித்து வெளியே தப்பிப்பதற்கு முன் , ஒரு முறை குமாரை திரும்பி பார்த்தாள். ..

குமார் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தான்... மனதை கல்லாக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தாள்.... குமாரும் , லாரன்ஸும் அடையாளம் தெரியாத படி எரிந்து சாம்பல் ஆனார்கள். ..

✈✈✈✈✈✈✈✈

5 நாட்களுக்கு பிறகு , நகரத்திற்கு வெளியே ஒரு கிராமத்தில். ....

" அக்கா... அன்னலட்சுமி அக்கா... உங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு "

" யாரு ராசா..? "

" வேற யாருக்கா... உம்மகன் குமார் தான் பணம் அனுப்பிருக்கான் "

" கொஞ்சம் படிச்சு சொல்லு ராசா "

" அன்புள்ள அம்மாவிற்கு. ...

நான் இங்கு நலம்.. என் மேனேஜர்  , என்னை பெங்களூரில் உள்ள பெரிய நிறுவனத்திற்கு மாற்றல் செய்துள்ளார்... சம்பளமும் அதிகம்.. நான் ஊருக்கு வருவதற்கு 10 வருடங்கள் கூட ஆகலாம்.. எனவே கவலை கொள்ள வேண்டாம். .  இத்துடன் இம்மாத சம்பளம் 25,000 இணைத்துள்ளேன்.. மாதாமாதம் பணம் அனுப்புகிறேன்.. . உடம்பை கவனித்து கொள்ளுங்கல். . தங்கை திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கள்.. என்னால் வரமுடியாத நிலை...

என்றும் அன்புடன் , உங்கள் மகன் குமார்... "

மணியார்டரை வாங்கி கொண்டு சந்தோஷத்துடன் உள்ளே ஓடினார்...

" எம்புள்ள நல்ல நிலைக்கு வந்துட்டான். .. இனி என் குடும்பம் கரை ஏறிடும் " என்று ஆனந்தகண்ணீர் வடித்தாள் அன்னலட்சுமி. .

அதேநேரம் , நியூஜெர்சி யில் ஏதோவொரு இடத்தில ஒரு பெண்ணும் அழுது கொண்டிருந்தாள். .. அது ஆனந்தகண்ணீர் அல்ல... காதலை இழந்த தவிப்பு. ..

முற்றும்