Wednesday, 30 March 2016

Batman vs Superman : dawn of justice விமர்சனம்

Batman vs Superman : dawn of justice

Warning : spoiler alert…..

இன்றைக்கு தான் இந்த படத்தை பார்த்தேன். பலரும் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள்.. அதனால் சந்தேகத்துடன் தான் இருந்தேன். ஆனால் அவர்களின் விமர்சனங்களுக்கு வந்த கமெண்டுகள் பாஸிட்டிவ்வாக இருந்ததால் , நம்ம தல பேட்மேன் கை விட மாட்டார் என நினைத்து சென்றேன்.. இனி படத்தை பற்றி பார்க்கலாம்....

இந்த படம் தெளிவாக புரிய வேண்டும் என்றால் , டி.சி காமிக்ஸ் ரசிகராக இருக்க வேண்டும்.  குறைந்த பட்சம் ‘ மேன் ஆஃப் ஸ்டீல்’ படத்தை பார்த்திருக்க வேண்டும். பார்காதவர்களுக்கு அக்கதையின் சுருக்கம்…

கிரிப்டான் கிரகம் அழியும்போது கால்-எல் எனும் சூப்பர்மேன் , குழந்தையாக பூமிக்கு அனுப்பி வைக்க படுகிறார். இங்கே மார்த்தா என்பவரால் கண்டெடுக்கபட்டு ‘கென்ட்’ ஆக வளர்கப்படுகிறார்.. ஒரு விபத்தால் வளர்ப்பு தந்தை இறந்துவிடுகிறார். அப்போது தான் , தான் யார் என்று கென்டிற்க்கு புரிகிறது. சூப்பர்மேனாக மாறுகிறார். பத்திரிகை நிருபரான ‘லூயிஸ்’உடன் காதலும் வருகிறது. .  அதே நேரம் அழிந்த கிரகமான கிரிப்டானில் இருந்து ‘ஜெனரல் சாட்’ பூமிக்கு வருகிறான். பூமியை அழித்து , புது கிரிப்டான் கிரகமாக மாற்றும்போது , சூப்பர் மேன் வந்து காப்பாற்றுகிறார்.. இந்த சண்டையில் பல கட்டிடங்கள் சேதமடைகிறது . மக்கள் , தெறித்து சாலையில் அங்குமிங்கும் ஓடுகிறார்கள்.. பல பேர் இறக்கிறார்கள்.. இறுதியில் சாட் இறப்பதோடு படம் முடிகிறது…

நாம் மேலே பார்த்த முதல் பாகமான ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ ன் கிளைமாக்ஸில் இருந்து இரண்டாம் பாகமான ‘ பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்’ படம் தொடங்குகிறது..

கிளைமாக்ஸில் மக்கள் தெறித்து ஓடும்போது , அவர்களுடன் ‘புரூஸ் வெயின்’ம் ஓடுகிறார்… புரூஸ் வெயின் , பகலில் ஒரு பணக்கார பிசினஸ்மேன் ஆகவும் , இரவில் பேட்மேனாகவும் வலம் வருபவர்… அந்த வில்லன் சாட் , உலகை அழித்திருந்தால் கூட இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது… சூப்பர்மேன் , உலகை காப்பாற்றுகிறேன் என்று ‘ யூ டர்ன் பண்ணி , டேபிள உடைச்சி , மூக்க நொறுக்கி’ அதகளம் செய்வதை பார்த்த பேட்மேன் (புரூஸ் வெயினிற்கு) கோபம் வருகிறது… சூப்பர்மேனாக இருப்பது போக மற்ற நேரங்களில் ‘கிளார்க் கென்ட்’ஆக பத்திரிகை நிருபர் வேலை பார்க்கும் சூப்பர்மேனிற்க்கு , பேட்மேனை பிடிக்க வில்லை… ஹீரோ என்ற பெயரில் ரவுடித்தனம் செய்வதாக நினைக்கிறார்… இப்படி லேசான உரசல் , பெரும் மோதலாக மாறுகிறது…

லெக்ஸ் லூதர் என்ற தனியார் ஆயுத வியாபாரி , தொடர்ந்து சூப்பர்மேனிற்க்கு எதிராக மக்களை திருப்பி விடுகிறான்.. ஒரு கட்டத்தில் சூப்பர்மேன் தான் , தனக்கான எதிரி என்று பேட்மேன் முடிவு செய்து , லெக்ஸ் லூதரிடம் இருந்த கிரிப்டான் கல்லை திருடுகிறார்… இதனிடையில் ‘பிரின்ஸ்’ என்ற பெண்ணின் மர்மமான நடவடிக்கையும் பேட்மேன் கவனிக்கிறார்.. பேட்மேன் , சூப்பர் மேன் சண்டை மூட்டி கொண்டாலும் அதனை இன்னும் வலுவாக்க ‘ டூம்ஸ்டே’ என்ற ஏலியனை லெக்ஸ் லூதர் உயிர்பிக்கிறான்.. இந்த ஏலியன் , சூப்பர்மேனுக்கு  நிகராக சக்தி வாய்ந்தது… சூப்பர் மேனின் தாயை கடத்தி , பேட்மேனை கொல்லும் படி சூப்பர்மேனை நிர்பந்திக்கிறான் , லெக்ஸ் லூதர்… சூப்பர்மேனும் பேட்மேனும் சண்டையிட்டு இறுதியில் லூயிசின் தலையீட்டால் ஒன்றுசேர்ந்து டூம்ஸ்டே வை அழிக்க போராடுகிறார்கள்… அப்போது பிரின்ஸ் என்ற பெயரில் உலவிய ‘ வொன்டர் வுமன்’ உதவி கிடைக்கிறது… வொன்டர் வுமனும் அழிவில்லா ஆற்றல் பெற்றவர்.. முடிவில் டூம்ஸ்டே இறக்கிறது. கூடவே சூப்பர்மேன் இறக்கிறார். லெக்ஸ் லூதர் சிறையில் அடைக்கபடுகிறான்.. சூப்பர்மேனின் இறுதி சடங்கு முடிந்து எல்லாரும் சென்றபிறகு , அவருக்கான சக்தி திரும்பவருவதாக ஒரு நொடியில் காட்டி படம் முடிகிறது..அடுத்த பாகமான ‘ ஜஸ்டிஸ் லீக்’ ற்காக…

படத்தின் முக்கிய  நிறைகளை முதலில் சொல்லி விடுகிறேன்.. சந்தேகமில்லாமல் பேட்மேனாக நடித்த பென் அஃ ப்ளிக்.. !!! மற்றும் படத்தின் பிண்ணனி இசை ‘  ஹன்ஸ் சிம்மர் ‘ … வசனங்கள்.... சூப்பர்மேனை பார்த்து "உனக்கு ரத்தம் வருமா ?" என்று பேட்மேன் கேட்கும் இடம் ... அதற்கு சூப்பர்மேன் நக்கலாக சிரித்தபின் கிளைமாக்ஸில் முகத்தில் கீறி இரத்தம் வர வைப்பது பக்கா கமர்ஷியல்... செம கிளாப்ஸ் .. அதைவிட தோட்டாவால் கூட துளைக்க முடியாத இரும்பு மனிதனான சூப்பர்மேனை , பேட்மேன் பிளாக் செய்யும் காட்சி என பேட்மேன் தான் படம் முழுக்க நிறைகிறார்.. சூப்பர்ஹீரோக்களையும் மனித உணர்சிகளோடு காட்டியது அருமை...

படத்தின் நீளம் மிகப்பெரிய குறை .. கிட்டத்தட்ட  2.30 மணி  ஓடுகிறது.. தமிழ்படங்களே 2.00 , 2.15 என குறுகும் போது ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கு இது அதிகம்… படத்தின் கிராபிக்ஸ் பட்டையைக் கிளப்பினாலும் , கிளைமேக்ஸ் சண்டை ஒளிவெள்ளதால் ஒன்றுமே புரியவில்லை.. அதேபோல் திரைக்கதை சூத்திரங்களுக்கு உட்பட்டு இடைவேளை அமைந்ததா என தெரியவில்ல.. சூப்பர்மேன் கோர்ட்டுக்கு வரும்போது இடைவேளை விட்டார்கள். ஒருவேளை நான் பார்த்த திரையரங்கு கோளாறா புரியவில்லை… கதையின் உச்சகட்டம் இடைவேளையாக வந்தால் முன்பாதி சோர்வு போயிருக்கும்… அதிகமாக கனவு காட்சிகள் வைத்தாலும் ஆடியன்ஸ் கடுப்பாவது உறுதி.. இதில் மூன்று இடத்தில் கனவு காட்சி… நாமும் ஏதோ பிரச்சினை என்று சீரியஸாக பார்க்கும்போது , தடார் என்று கதாபாத்திரம் எழுந்திருக்கும் போது , நமக்கு ‘புஸ்ஸ்ஸ்’ ஆகிறது…

மற்றபடி ‘உட்காறவே முடியல , ரொம்ப ஸ்லோ ‘ என்று இல்லை… நிச்சயமா ஒருமுறை பார்க்கலாம்…

No comments:

Post a Comment