Monday, 23 March 2015

Incredible - அடுத்த அட்டகாசம் !!

பல நாள் கனவு நினைவு ஆனது போல இருக்கிறது இந்த அறிவிப்பு. .

ஆமாம். . பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த incredible படத்தின் தொடர்ச்சி இப்போது வரபோகிறது.. இந்த செய்தி வெளியான உடனே Twitter ல் trend ஆனது. . இதிலே தெரிந்து கொள்ளலாம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை. ..

அனிமேஷன் படம் , சூப்பர் ஹீரோ படம் என சாதாரணமான விஷயம் தான். . அப்புறம் எப்படி படம் வெகுவாக கவர்ந்தது. ..

சிம்பிள். .. படம் அப்படியே நம்ம வீட்டு குடும்பத்தை பிரதிபலித்தது..

பிரச்சினையை தேடி போய் மாட்டி கொள்ளும் அப்பா , அவரை திட்டிகொண்டே இருந்தாலும் கணவனை விட்டு கொடுக்காமல் காப்பாற்ற போராடும்  மனைவி , அப்பா அம்மா கன்டிஷன் களால் காண்டாகும் மகள். . அவளை வெறுப்பேற்றுவதையே தொழிலாக இருக்கும் மூத்த மகன் , இந்த சண்டையை ரசிக்கும் கடைசி குட்டி பாப்பா. ...

இப்படி ஆரவாரமாக ஆரம்பித்து முடிந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறேன் ....

Friday, 20 March 2015

அமெரிக்க to சைதாப்பேட்டை- பாகம் இரண்டு


பாகம் - 2
இடம் :- சைதாப்பேட்டை.
நேரம் :- 6.00 pm
( இந்திய நேரப்படி )

தன்னுடைய நண்பன் ஜகாவை கூட்டி கொண்டு போக வந்திருந்தான் குமார். ... ஜகா வேலை செய்யும் இடத்தில் அவன் முதலாளி க்கு விசுவாசம இருந்ததால் அவன் மேல் தனி பாசம் , முதலாளி க்கு... அவரிடம் தன் நண்பன் குமாருடைய வேலை விஷயமாக பேச தான் ஜகா  வந்திருந்தான். அவனை குமார் தனது டூவீலரில் அழைத்து வந்திருந்தான்.

அவர்கள் வந்தது மிக பெரிய ஹோட்டல். முதலாளி அங்கே தங்கியிருப்பதால் , நேரடியாக பேச வந்திருந்தனர்.... ஜகா மட்டும் உள்ளே சென்று பேசி கொண்டிருக்க , குமார் வெளியே காத்திருந்தான்.

அவன் மனதில் பல எண்ணங்கள் வந்து குழப்பின. . அடுத்த மாதம் வீட்டுக்கு பணம் அனுப்பனும்.  இந்த நிலையில் வேலையை வேறு விட்டு விட்டான்....இந்த கஷ்டத்திற்கு நடுவிலும் பெண்களை பார்ப்பதை அவன் விடவில்லை.

நண்பன் வர லேட் ஆவதால் , பைக்கில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாம் என பைக்கை நெருங்கினான். பைக் ஸ்டாண்ட் ல் பல ஆண்கள் பைக்கோடு நின்று கொண்டிருந்தனர்... கன நேரத்தில் எங்கிருந்தோ வந்த பெண்கள் ஒவ்வொருவரோடு ஏறி கொண்டனர் ...

இதை பார்த்த குமார் , இன்னும் காண்டாகி விட்டான்.

"எல்லாம் ஜோடி ஜோடியா சுத்துரானுங்க... நம்பலும் இருக்கோமே... சே..."

என பொறமியவாறே ஹோட்டலை பார்த்து கொண்டு இருந்தான். திடீரென ஒரு அழகான பெண் , இவன் இருந்த திசையை நோக்கி ஓடி வந்தாள்...

"இவளை யாரு தள்ளிட்டு போக போறானோ ? " என அவன் ஏக்க பெருமூச்சு விடுவதற்குள் , அவள் இவனை நெருங்கி விட்டாள்.

இவனை ஏதும் கேட்காமல் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டாள்.

"பிளீஸ். .. சீக்கிரம் வண்டியை எடுங்க"

"ஹலோ. . யாருங்க நீங்க ?"

குமார் கேட்டு கொண்டு இருக்கும் போதே , ஹோட்டல் உள்ளிருந்து 5 ,6 பேர் இவளை நோக்கி ஓடி வந்தனர்... உடனே குமார் அந்த பெண்ணிடம் திரும்பி ,

"நீங்க யாரு ? அவங்க உங்களையா துரத்துராங்க ?"

"இப்போதைக்கு வண்டிய எடுங்க பிளிஸ். . போற வழியில் எல்லாத்தையும் சொல்றேன்...

என்னுடைய பெயர்
" கேத்ரின்"   ...  

------/-------

மூன்று மணி நேரத்திற்கு முன்பு. ...
இடம் :- சென்னை விமான நிலையம்.
நேரம் :- 3.00 pm

அங்கே new Jersey ல் இரவு 9.30 pm க்கு பிளைட் ஏறினாள் கேத்ரின். . இங்கு  மதியம் போல வந்திரங்கினாள்.... விமான நிலையத்திற்கு வெளியே ஒரு டாக்சி யை அழைத்தாள். .

"Madem... where you go ? I send you madem. Come madem" அரைகுறை English ல் பொளந்து கட்டினான் டாக்ஸி டிரைவர்...

" நீங்க தமிழ்லயே பேசலாம்"

"என்னமா. . பாக்க வெள்ளக்காரி மாதிரி இருக்க... நல்லா தமிழ் பேசுற ? பூர்வீகம் இங்கயா ? "

" ஆமாம்... ம்ம்ம். . சரி lemon tree hotel போகனும்  "

"போலாம்மா. . உக்காறு"

வண்டி கிளம்பியது. .. சிறிது நேரத்தில் அவள் போன் சிணுங்கியது. .. வீட்டிலிருந்து போன்...

"ஹலோ கேத்ரின்" படபடப்புடன் மாமா பேசினார். .

"மாமா. . பயப்படாதீங்க. . நான் நல்லா தான் இருக்கேன். "

" அங்க ஏன் மா போன ?"

" அப்பா மரணத்துல ஏதோ மர்மம் இருக்கு மாமா.. அது தெரியரவரைக்கும் எனக்கு நிம்மதி இல்லை. . இங்க ஒரு ஹோட்டல்ல ரும் online book பண்ணிட்டேன்.நான் சீக்கிரமே வந்துடறேன் மாமா ."

" எனக்கு பயமா இருக்.."

திடீரென ஒரு லாரி , அந்த கார் மீது மோதியது.. கார் பல்டி அடித்து விழுந்தது. டிரைவர் பரிதாபமாக இறந்து போனான்.  கேத்ரின் தட்டுத்தடுமாறி வெளியே வந்து விழுந்தாள்.. கீழே விழுந்த தனது மொபைல் பேட்டரி கழண்டு விழுந்தது.  அதை பொறுக்கி எடுத்து நிமிர்ந்து பார்த்தாள். .  நொடிப்பொழுதில் அங்கே வந்த முரடர்கள் ,

"டேய் ... சீக்கிரம் அவள துக்கி நம்ம வண்டில போடுடா. .. அவ முகம் சிதையாம பாத்துக்கோடா.. அவ செத்தா , நமக்கு வெறும் 6. மணி நேரம் தான் இருக்கும். .

தான் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியதை உணர்ந்த கேத்ரின் , உயிரை காப்பாற்றி கொள்ள ஓடினாள்..ஜன கூட்டம் நிறைந்த பகுதியில் புகுந்து தப்பித்தாள்... அந்த ஹோட்டலுக்கு வழிகேட்டு சென்றடைந்தாள்.... அந்த முரடர்களிடம்  இருந்து மறைவாக இருக்க நினைத்தாள்...

அந்த ஹோட்டலில் நான்காவது மாடியில் D76 ரூமிற்க்கு சென்றாள். பேட்டரியை திரும்பவும் போட்டு Charge ல் போட்டாள்.  பின்னர் காயங்களை கழுவி , குளித்து விட்டு வந்தாள். . மீண்டும் போன். . அப்பாவின் நண்பர் எட்வர்ட். ..

"ஹலோ. . சொல்லுங்க அங்கிள். "

" ஏன் மா இப்படி பண்ண ? நான் வேனும்னா அங்க வரட்டுமா மா ?"

" பரவாயில்லை. . வேண்டாம் அங்கிள். ."

" இப்போ எங்க மா தங்கி இருக்க ?"

" lemon tree hotel .. no D76 மாமா. ."

" சரிம்மா. . பத்திரமா இரு "

Call Ended. ..

ரூமிற்க்கு  வெளியே ஏதோ சத்தம்.  சாவி துவாரம் வழியாக பார்த்தாள்.. அதே முரடர்கள்... எப்படி தன் இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறார்கள் என குழம்பினாள்..

பெட்ஷீட்டை ஜன்னலில் கட்டி வெளிப்புறமாக இறங்கினாள் கேத்ரின். . அவளது ரூமிற்க்கு நேர்எதிர் கீழே இருந்த ரூமில் நுழைந்தாள்.. இதற்குள் , அவர்கள் ரூமை உடைத்து கொண்டு உள்ளே வந்து விட்டார்கள். கேத்ரினை உள்ளே காணவில்லை.  ஜன்னலில் கட்டி இருந்த பெட்ஷீட்டை பார்த்ததும் உண்மை தெரிந்து விட்டது அவர்களுக்கு.. உடனடியாக கீழே இறங்கி ஓடினார்கள்.

அப்போது தான் கேத்ரின் குமாரை பார்த்து வண்டியில் ஏறினாள்...


-------/------
இடம் :- சைதாப்பேட்டை ... சற்றே தள்ளி ஒரு ரோட்டு கடையில் . .
நேரம் :- 8.00 pm

கேத்ரினுக்கு சாப்பாடு வாங்கி தந்தான்.

"Thanks. .உன் பெயர் என்ன ?"

" குமார்.. ஆமா.  நீ பாக்க இந்த ஊரு மாதிரி இல்ல.. ஆனா நல்லா தமிழ் பேசுற .. எப்படி ? "

" என்னோட அம்மா தமிழ். ."

" ஓ. ..  யாரு அவுங்க. ? என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன். . என்ன பிரச்சினை உனக்கு "...

" எனக்கு யாரை நம்புவது னு தெரியல... என அப்பாவோட நண்பரே சொத்துக்காக என் அப்பாவை கொன்னுட்டாரு.. இப்போ என்னை... இப்போதைக்கு இந்த ஊரில் நான் உன்னை மட்டும் நம்பறேன். ." என அழுத கேத்ரின் , சிறு வயதில் அப்பாவிடம் விளையாடியதிலிருந்து எல்லாவற்றையும் சொன்னாள். ..

பின்னர் குமார் அவளிடம் ,
" நீ சொன்னதில் இருந்து எனக்கு இரண்டு விஷயங்கள் தெரியுது"

" என்ன அது ?"

" முதலாவது , உங்க மாமா உனக்கு Call பண்ணது உன் மேல இருக்க பாசத்தால்... ஆனால் உன் அப்பாவின் நண்பர்  எட்வர்ட் உனக்கு call பண்ணது சம்பந்தம் இல்லாதது... அதனால நாம சந்தேக பட முடியாது. .

ஒருவேளை அவர் தான் உன்ன கொல்ல போறார்னா  , அவருக்கு உன் இடம் தெரியாது.  நீ போன்ல உன் இடத்தை சொல்லும்போதே எப்படி அவரால் ஆட்களை அனுப்ப முடியும். ..  so இந்த பிரச்சினைக்கும் எட்வர்ட் க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. .."

" ஓ. .. சரி. . இரண்டாவது விஷயம் என்ன ? "

" ஒருவேளை என் யூகம் தவறா இருக்கலாம். .. அது....."

" பரவாயில்லை. .. சொல்லு.."

" அந்த ரவுடிகள் உன்ன கொல்ல வரல.. இன்னும் சொல்லபோனா , அவங்களுக்கு நீ தேவையில்லை. ...

உன்னுடைய கண்கள் தான் அவர்களுக்கு உயிரோடு தேவை. .."

"What .......???"

தொடர்ச்சி அடுத்த பாகத்தில். ..

அமெரிக்கா to சைதாப்பேட்டை பாகம் ஒன்று


பாகம் ஒன்று

இடம் :- நியு ஜெர்சி , அமேரிக்கா ( தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி )

அதிகாலை , நல்ல உறக்கத்தில் இருந்து எழுந்தாள் "கேத்ரின்" ... வயது 20 , அழகான தோற்றம். இவளது தந்தை "ரிச்சர்ட்", ஒரு அமெரிக்க பெண்ணிற்கும் , தமிழறக்கும் பிறந்தவர். .. அதனாலேயே தமிழ் பற்று காரணமாக , ஒரு அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.... தனது மகளான கேத்ரினை கூட ஆங்கிலம் முதல் மொழியாக இருந்தாலும் , தமிழை கற்க வைத்தார். ... பார்போரை மயங்க வைக்கும் அழகியான கேத்ரினை , என்னேரமும் உறவினர்கள் கண்கானிப்பிலேயே வளர்த்தார்... அதனால் தான் என்னவோ , அவளுக்கு ஊர் சுற்றுவதில் அலாதி பிரியம். .. ஆனால் தாயின் சொந்த ஊரான தமிழ் நாட்டை பற்றி தெரியாமலே வளர்ந்தாள் ... அவளது 12 ஆம் வயதில் தாயை ஒரு விபத்தில் இழந்தாள்... அதுமுதல் தன் குடும்பத்துடன் நெருக்கமாக பழகினால்.. தன் மனக்கவலை மாற...

இந்நிலையில் தான் , அந்த கொடூர  செய்தி கேட்டு எழுந்தாள்..ஒரு வாரத்திற்கு முன்பு பணி நிமித்தமாக தமிழ்நாடு சென்ற ரிச்சர்ட் , தீ விபத்தில் சிக்கி முழுவதுமாக எரிந்து போனார் என்று. . அவரது உடலை கூட வாங்க முடியாத நிலை.  சாம்பல் கூட மிச்சமில்லை என தகவல் வந்தது எமபஸியிடமிருந்து .. ரிச்சர்ட் பெரிய தொழிலதிபர் ஆதலால்,  மிகுந்த மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. .


தந்தையும் தாயும் இழந்து அனாதையாக நின்ற கேத்ரின் , யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்தாள்... அவள் வீட்டிலேயே தங்கி இருந்த அவளது மாமா லாரன்ஸ் , அவளை தேற்ற என்னவேள்ளாமோ செய்து பார்த்தார்.. தந்தையின் நண்பர் எட்வர்ட் ,

"தனியா எப்படிமா இருப்ப ? என்று மகனை திருமணம் செய்து கொள். உன்னையும் உனது சொத்துகளையும் நான் பார்த்து கொள்கிறேன் "

" இப்போ எதற்கு அங்கிள் இந்த பேச்சு. . நடக்கும் போது பாக்கலாம்"

கேத்ரின் மனதிற்குள் பொறுமினாள் ,"இவனை எல்லாம் நண்பன் என தந்தை நம்பி இருக்காரே?"

இரண்டு நாட்கள் கழிந்தன....... வீட்டை அடுக்கி கொண்டிருந்தாள் கேத்ரின். தனது மாமாவின் பச்சை நிற பனியன் பின்புறம் ஒரு துண்டு கிழிந்து இருந்தது. அவரது கண்ணாடி விரிசல் விட்ட வாட்ச் என எல்லாவற்றையும் பார்த்து பழைய நினைவுகளை அசை போட்டாள்... சுய கௌவரவம் பார்க்காத அவரது எளிமை...அடிக்கடி தனிமையில் இருக்கும் போது தன் கண்ணில் சிகப்பு நிற ஒளியை அடிக்கும் தந்தை. .. தன் செலவுக்கு அதிகமாக பணம் கொடுத்து அனுப்பும் பாட்டி என அழகான குடும்பம் பொலிவிழந்ததை எண்ணி , அவள் மனவருத்தம் அதிகமானது...இத்தனைக்கும் அவள் முழுநேரமும் உறவினர்கள் பார்வையில் இருந்தாள்..எனினும் தனிமை அவளை வாட்டியது.

இந்நிலையில் , திடீரென ஒருநாள் அவளுக்கு இன்ப அதிர்ச்சி.  அவளது Mail' க்கு , அவள் photography competition ' க்கு செலக்ட் ஆகி விட்டாள் என  செய்தி வந்தது... photography அவள் உயிர்.  தனது தோழிகளுடன் சேர்ந்து இதை செய்து வந்தாள். இந்த எதிர்பாராத செய்தியால் அவள் மகிழ்வாள் என நினைத்த குடும்பத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாமா லாரன்ஸ் அவளிடம் ,

"இந்த செய்தி உனக்கு மகிழ்ச்சியாக இல்லையா மா ?"

"மகிழ்ச்சியான செய்தி தான் மாமா ... வந்த நேரம் தவறு.."

"வீட்டிலேயே இருந்தால் அப்படி தான் மா இருக்கும் .. அந்த photography competition சீனா ல நடக்கும். சந்தோஷமா போய்ட்டு வா மா. .."

"சரி மாமா"

பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுடன் New Jersey airport சென்றாள்... மணி 9.00 pm ஆகியிருந்தது..போன் சிணுங்கியது ..

" ஹேய். .. கேத்ரின் !! நாங்க already வந்துட்டோம் டி... நீ எங்கே இருக்க ?"

" Airport டி"

"என்னடி.. இன்னும் கிளம்பளியா ? சீக்கிறம் டி "

"எனக்கு வர பிடிக்கல டி.."

"அப்புறம் ஏண்டி airport வந்த ? சரி இப்பவே அங்க , மணி 9 க்கு மேல ஆகிடிச்சி போல... நீ அங்கேயே ரூம் ல தங்கிட்டு காலைல வீட்டுக்கு போரியா ? இல்ல இப்பவே வீட்டுக்கு போறியா ?"

"இரண்டும் இல்லை. .. தமிழ்நாட்டுக்கு  போனேன். ."

"என்னடி சொல்ற. .? உங்க வீட்...."

" Call Ended"


------/-------

இடம் :- சைதாப்பேட்டை
நேரம் :-  6.25 am

குமார். .. ஒரு சாதாரண உதிரி பாகங்கள் செய்யும் இடத்தில் வேலை பார்ப்பவன்.. சற்றே புத்திசாலி. . முந்தைய நாள் , முதலாளி திட்டியதால் நண்பன் ஜகா வுடன் சரக்கு அடித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்தவன்  , காலையில் தான் போதை தெளிந்தது. .

" டேய் ஜகா... இன்னைக்கு கம்பெனி லீவு போடலாம்னு இருக்கேன் "

"இன்னைக்கும் ஓசி சரக்கு அடிக்க பிட்டா... எழுந்து கிளம்புடா.. டேய்"

"மச்சி. . மேல பாரேன் .. கிழக்குல இருந்து மேற்க்குக்கு  ஒரு பிளைட் போகுது.  அப்போ எதிர் பிளைட் வரும்ல மச்சி ? "

"அது எப்படிடா ... சரக்கடிச்சா சம்பந்தமே இல்லாம பேசுர ? போய் கம்பெனிக்கு கிளம்புடா"

"ஓனர் திட்டும்போது , எல்லா பொண்ணுங்களும் பாத்திடுச்சி மச்சி.. அசிங்கமா இருக்கு"

"விடுடா.. அங்க இருக்குறது எல்லாம் ரதிங்க பாரு ..."

"அதுங்க கூட எனக்கு ஓகே ஆகல மச்சி"

" வேற நல்ல பொண்ணா கிடைப்பா டா.. விடு.. நீ சாக்கு சொல்லிகிட்டே மாடில இருக்காத.. எழுந்து வாடா.."

"நீ வேணா பாரு மச்சி. . சும்மா வெள்ளக்காரி மாதிரி ஒரு பொண்ண உஷார் பண்றேன் "...

------/------

இடம் :- சென்னை க்கு ஒதுக்குப்புறமாக ஒரு பாழடைந்த இடிந்த கட்டிடம்.
நேரம் :- 6.20 am

ஆளுயர குழி.. அதை சுற்றி 4 ,5 பேர்.. நடுவில் ஒரு முரடன். . குழிக்குள் ஒரு அப்பாவி.

"அண்ணே... கேஸ கூட வாபஸ் வாங்கிடறேன் னே.. குடும்பத்தோட எங்கயாவது போயிடறேன் னே.. என்ன விட்டுடு னே..."

"அத நான் முதல்ல நல்லபடியா சொன்னப்பவே பண்ணிறுக்கனும்... உயிர் பயம் காட்டுனா தான் ஒத்துக்குவியா டா ?"

"அண்ணே...."

"டேய். . அவன் தலையில அடிச்சி , அவன புதங்கைடா. ... உயிர் போக கூடாது. . அவன் சாகுறத அவனே பாக்கணும். "

  ஐந்தே நிமிடத்தில் அவனை மண்ணை போட்டு உயிருடன் புதைத்தார்கள். பின்னர் அந்த முரடன் தன் கார் டிக்கியில் இருந்த செடியை அங்கே நட்டான்...

"எவ்ளோ ஆட்டம் காட்டினான். . இப்போ பாரு.. என் செடிக்கு உரமாகிட்டான் ...

ஹாஹாஹா ..."

சொல்லி முடிக்கவில்லை போன் சிணுங்கியது..

"ஹலோ"

"அண்ணே.. நான் new Jersey ல இருந்து டேவிட் பேசுறேன் னே"

"சொல்லுடா. . போன இடத்துல மாட்டிகிட்டியா ?"

"இல்லனே. .. அவரு போட்ட பிளான் சூப்பரா வொர்க் ஆகுது னே...

சிட்டு ... நம்பள நோக்கி தான் பறந்து வருது னே...
ஹாஹாஹா ...."

தொடர்ச்சி ... அடுத்த பாகத்தில். ..