பாகம் - 2
இடம் :- சைதாப்பேட்டை.
நேரம் :- 6.00 pm
( இந்திய நேரப்படி )
தன்னுடைய நண்பன் ஜகாவை கூட்டி கொண்டு போக வந்திருந்தான் குமார். ... ஜகா வேலை செய்யும் இடத்தில் அவன் முதலாளி க்கு விசுவாசம இருந்ததால் அவன் மேல் தனி பாசம் , முதலாளி க்கு... அவரிடம் தன் நண்பன் குமாருடைய வேலை விஷயமாக பேச தான் ஜகா வந்திருந்தான். அவனை குமார் தனது டூவீலரில் அழைத்து வந்திருந்தான்.
அவர்கள் வந்தது மிக பெரிய ஹோட்டல். முதலாளி அங்கே தங்கியிருப்பதால் , நேரடியாக பேச வந்திருந்தனர்.... ஜகா மட்டும் உள்ளே சென்று பேசி கொண்டிருக்க , குமார் வெளியே காத்திருந்தான்.
அவன் மனதில் பல எண்ணங்கள் வந்து குழப்பின. . அடுத்த மாதம் வீட்டுக்கு பணம் அனுப்பனும். இந்த நிலையில் வேலையை வேறு விட்டு விட்டான்....இந்த கஷ்டத்திற்கு நடுவிலும் பெண்களை பார்ப்பதை அவன் விடவில்லை.
நண்பன் வர லேட் ஆவதால் , பைக்கில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாம் என பைக்கை நெருங்கினான். பைக் ஸ்டாண்ட் ல் பல ஆண்கள் பைக்கோடு நின்று கொண்டிருந்தனர்... கன நேரத்தில் எங்கிருந்தோ வந்த பெண்கள் ஒவ்வொருவரோடு ஏறி கொண்டனர் ...
இதை பார்த்த குமார் , இன்னும் காண்டாகி விட்டான்.
"எல்லாம் ஜோடி ஜோடியா சுத்துரானுங்க... நம்பலும் இருக்கோமே... சே..."
என பொறமியவாறே ஹோட்டலை பார்த்து கொண்டு இருந்தான். திடீரென ஒரு அழகான பெண் , இவன் இருந்த திசையை நோக்கி ஓடி வந்தாள்...
"இவளை யாரு தள்ளிட்டு போக போறானோ ? " என அவன் ஏக்க பெருமூச்சு விடுவதற்குள் , அவள் இவனை நெருங்கி விட்டாள்.
இவனை ஏதும் கேட்காமல் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டாள்.
"பிளீஸ். .. சீக்கிரம் வண்டியை எடுங்க"
"ஹலோ. . யாருங்க நீங்க ?"
குமார் கேட்டு கொண்டு இருக்கும் போதே , ஹோட்டல் உள்ளிருந்து 5 ,6 பேர் இவளை நோக்கி ஓடி வந்தனர்... உடனே குமார் அந்த பெண்ணிடம் திரும்பி ,
"நீங்க யாரு ? அவங்க உங்களையா துரத்துராங்க ?"
"இப்போதைக்கு வண்டிய எடுங்க பிளிஸ். . போற வழியில் எல்லாத்தையும் சொல்றேன்...
என்னுடைய பெயர்
" கேத்ரின்" ...
------/-------
மூன்று மணி நேரத்திற்கு முன்பு. ...
இடம் :- சென்னை விமான நிலையம்.
நேரம் :- 3.00 pm
அங்கே new Jersey ல் இரவு 9.30 pm க்கு பிளைட் ஏறினாள் கேத்ரின். . இங்கு மதியம் போல வந்திரங்கினாள்.... விமான நிலையத்திற்கு வெளியே ஒரு டாக்சி யை அழைத்தாள். .
"Madem... where you go ? I send you madem. Come madem" அரைகுறை English ல் பொளந்து கட்டினான் டாக்ஸி டிரைவர்...
" நீங்க தமிழ்லயே பேசலாம்"
"என்னமா. . பாக்க வெள்ளக்காரி மாதிரி இருக்க... நல்லா தமிழ் பேசுற ? பூர்வீகம் இங்கயா ? "
" ஆமாம்... ம்ம்ம். . சரி lemon tree hotel போகனும் "
"போலாம்மா. . உக்காறு"
வண்டி கிளம்பியது. .. சிறிது நேரத்தில் அவள் போன் சிணுங்கியது. .. வீட்டிலிருந்து போன்...
"ஹலோ கேத்ரின்" படபடப்புடன் மாமா பேசினார். .
"மாமா. . பயப்படாதீங்க. . நான் நல்லா தான் இருக்கேன். "
" அங்க ஏன் மா போன ?"
" அப்பா மரணத்துல ஏதோ மர்மம் இருக்கு மாமா.. அது தெரியரவரைக்கும் எனக்கு நிம்மதி இல்லை. . இங்க ஒரு ஹோட்டல்ல ரும் online book பண்ணிட்டேன்.நான் சீக்கிரமே வந்துடறேன் மாமா ."
" எனக்கு பயமா இருக்.."
திடீரென ஒரு லாரி , அந்த கார் மீது மோதியது.. கார் பல்டி அடித்து விழுந்தது. டிரைவர் பரிதாபமாக இறந்து போனான். கேத்ரின் தட்டுத்தடுமாறி வெளியே வந்து விழுந்தாள்.. கீழே விழுந்த தனது மொபைல் பேட்டரி கழண்டு விழுந்தது. அதை பொறுக்கி எடுத்து நிமிர்ந்து பார்த்தாள். . நொடிப்பொழுதில் அங்கே வந்த முரடர்கள் ,
"டேய் ... சீக்கிரம் அவள துக்கி நம்ம வண்டில போடுடா. .. அவ முகம் சிதையாம பாத்துக்கோடா.. அவ செத்தா , நமக்கு வெறும் 6. மணி நேரம் தான் இருக்கும். .
தான் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியதை உணர்ந்த கேத்ரின் , உயிரை காப்பாற்றி கொள்ள ஓடினாள்..ஜன கூட்டம் நிறைந்த பகுதியில் புகுந்து தப்பித்தாள்... அந்த ஹோட்டலுக்கு வழிகேட்டு சென்றடைந்தாள்.... அந்த முரடர்களிடம் இருந்து மறைவாக இருக்க நினைத்தாள்...
அந்த ஹோட்டலில் நான்காவது மாடியில் D76 ரூமிற்க்கு சென்றாள். பேட்டரியை திரும்பவும் போட்டு Charge ல் போட்டாள். பின்னர் காயங்களை கழுவி , குளித்து விட்டு வந்தாள். . மீண்டும் போன். . அப்பாவின் நண்பர் எட்வர்ட். ..
"ஹலோ. . சொல்லுங்க அங்கிள். "
" ஏன் மா இப்படி பண்ண ? நான் வேனும்னா அங்க வரட்டுமா மா ?"
" பரவாயில்லை. . வேண்டாம் அங்கிள். ."
" இப்போ எங்க மா தங்கி இருக்க ?"
" lemon tree hotel .. no D76 மாமா. ."
" சரிம்மா. . பத்திரமா இரு "
Call Ended. ..
ரூமிற்க்கு வெளியே ஏதோ சத்தம். சாவி துவாரம் வழியாக பார்த்தாள்.. அதே முரடர்கள்... எப்படி தன் இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறார்கள் என குழம்பினாள்..
பெட்ஷீட்டை ஜன்னலில் கட்டி வெளிப்புறமாக இறங்கினாள் கேத்ரின். . அவளது ரூமிற்க்கு நேர்எதிர் கீழே இருந்த ரூமில் நுழைந்தாள்.. இதற்குள் , அவர்கள் ரூமை உடைத்து கொண்டு உள்ளே வந்து விட்டார்கள். கேத்ரினை உள்ளே காணவில்லை. ஜன்னலில் கட்டி இருந்த பெட்ஷீட்டை பார்த்ததும் உண்மை தெரிந்து விட்டது அவர்களுக்கு.. உடனடியாக கீழே இறங்கி ஓடினார்கள்.
அப்போது தான் கேத்ரின் குமாரை பார்த்து வண்டியில் ஏறினாள்...
-------/------
இடம் :- சைதாப்பேட்டை ... சற்றே தள்ளி ஒரு ரோட்டு கடையில் . .
நேரம் :- 8.00 pm
கேத்ரினுக்கு சாப்பாடு வாங்கி தந்தான்.
"Thanks. .உன் பெயர் என்ன ?"
" குமார்.. ஆமா. நீ பாக்க இந்த ஊரு மாதிரி இல்ல.. ஆனா நல்லா தமிழ் பேசுற .. எப்படி ? "
" என்னோட அம்மா தமிழ். ."
" ஓ. .. யாரு அவுங்க. ? என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன். . என்ன பிரச்சினை உனக்கு "...
" எனக்கு யாரை நம்புவது னு தெரியல... என அப்பாவோட நண்பரே சொத்துக்காக என் அப்பாவை கொன்னுட்டாரு.. இப்போ என்னை... இப்போதைக்கு இந்த ஊரில் நான் உன்னை மட்டும் நம்பறேன். ." என அழுத கேத்ரின் , சிறு வயதில் அப்பாவிடம் விளையாடியதிலிருந்து எல்லாவற்றையும் சொன்னாள். ..
பின்னர் குமார் அவளிடம் ,
" நீ சொன்னதில் இருந்து எனக்கு இரண்டு விஷயங்கள் தெரியுது"
" என்ன அது ?"
" முதலாவது , உங்க மாமா உனக்கு Call பண்ணது உன் மேல இருக்க பாசத்தால்... ஆனால் உன் அப்பாவின் நண்பர் எட்வர்ட் உனக்கு call பண்ணது சம்பந்தம் இல்லாதது... அதனால நாம சந்தேக பட முடியாது. .
ஒருவேளை அவர் தான் உன்ன கொல்ல போறார்னா , அவருக்கு உன் இடம் தெரியாது. நீ போன்ல உன் இடத்தை சொல்லும்போதே எப்படி அவரால் ஆட்களை அனுப்ப முடியும். .. so இந்த பிரச்சினைக்கும் எட்வர்ட் க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. .."
" ஓ. .. சரி. . இரண்டாவது விஷயம் என்ன ? "
" ஒருவேளை என் யூகம் தவறா இருக்கலாம். .. அது....."
" பரவாயில்லை. .. சொல்லு.."
" அந்த ரவுடிகள் உன்ன கொல்ல வரல.. இன்னும் சொல்லபோனா , அவங்களுக்கு நீ தேவையில்லை. ...
உன்னுடைய கண்கள் தான் அவர்களுக்கு உயிரோடு தேவை. .."
"What .......???"
தொடர்ச்சி அடுத்த பாகத்தில். ..

No comments:
Post a Comment