இந்தமுறை ஒரு கதாபாத்திரத்தை எப்படி சுவாரஸ்யமாக அமைக்கலாம் என பார்க்கலாம்…
சினிமாவில் மட்டும் தான் , மக்கள் காசு கொடுத்து உள்ளே வந்து தான் நினைத்தது எதுவும் நடக்கக்கூடாது என ஆசைப்படுவார்கள்… அவர்கள் நினைத்த எல்லாம் நடந்தால் “ யூகிக்க கூடிய திருப்பம் , அடுத்ததை குழந்தை கூட சொல்லி விடும்” என விமர்சனங்கள் பறக்கும்…
இதை தவிர்க்க , ஒரு சீனை முற்றிலும் மாறுபட்ட ரீதியில் எடுக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அந்த கதாபாத்திரம் , இயல்பு நிலையில் இருந்து சற்றே விலகி இருந்தால் ( கவனம் : லாஜிக் பார்த்து ) பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.. சீக்கிரம் படத்தில் ஒன்றி விடுவார்கள்..
உதாரணமாக , கொம்பன் படத்தில் வந்த கார்த்திக்கும் , பருத்திவீரன் படத்தில் வந்த கார்த்திக்கும் ஏறத்தாழ ஒரேமாதிரி குணாதிசயம் இருக்கும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் கதாபாத்திரம் படைக்கபட்டிருக்கும்.. அதற்கு நிறைய பில்ட்அப் சீன் தேவை.. அதுவே மெட்ராஸ் பட காளி யாக வந்த கார்த்திக் எப்படி ? மிக சாதாரணமாக ஒரு பாடலின் நடுவே என்ட்ரி கொடுப்பார்.. ஆனாலும் மறக்க முடியவில்லை தானே…!! அந்த கதாபாத்திர வடிவமைப்பு அப்படி.. நல்ல ரிச்சான பையன் போன்ற தோற்றம்… ஆனால் பேசுவதோ ‘ சும்மா நேத்துக்கு சுவரயே பாத்துகினு கீர ?’என்று… முரண்பாடு இருந்ததால் நம்மை அறியாமலும் ஒன்ற முடிந்தது…
அதேபோல் ஜோக்கர்… !!! குழந்தைகள் ரசிக்கும்படியாக முகத்தில் வர்ணம் பூசியபடி வித்தியாசமான உடல்மொழியோடு ஒரு கதாபாத்திரம்… அவன் சைக்கோதனமாக கொலை செய்யும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.. சரி , அவன் கெட்டவன் என நினைக்கும் போது , அவன் பேசும் வசனங்கள் அனைத்தும் தத்துவங்களாக இருப்பது மேலும் அதிர்ச்சி… இப்படி ஆடியன்ஸ் எதிர்பார்த்ததை கிளிஷேவாக கொடுக்காமல் வித்தியாசம் காட்டியதால் ஜோக்கர் அழிக்கமுடியாத கதாபாத்திரம் ஆகிவிட்டது…
உங்கள் திரைக்கதையிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரமாவது இப்படி அமைப்பது , ஆடியன்ஸிற்க்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்.