புதிதாக திரைக்கதை எழுதுபவர்களின் பெரும்பாலான சாய்ஸ் , திரில்லர் டைப் தான்.. அல்லது காமெடி , காதல்... நாம் பொதுவாக செய்யும் தவறு , கதாபாத்திரங்களுக்கு பிண்ணனி , அழுத்தத்தை உருவாக்காமல் விட்டுவிடுவது.. அதாவது படம் தொடங்கி பத்தாவது நிமிடத்தில் ஆடியன்ஸ் , முக்கிய கதாபாத்திரத்தோடு ஒன்றி விட வேண்டும். அது அழுதால் இவர்களும் அழ வேண்டும்... அப்படி...
இங்குதான் பலரும் தடுமாறும் கட்டம்... உணர்வுபூர்வமாக எழுதாமல் , கடனே என்று ஒரு காதல் , மோதலை அமைப்பது.. இதனால் ஆடியன்ஸ் படத்தோடு ஒன்றாமல் செல்போனை பார்க்க வைத்துவிடுகிறோம்..
இதனை தவிர்க்க , இதுவரை நீங்கள் பார்த்த கேட்ட சம்பவங்களில் இருந்து உணர்வுபூர்வமான முடிச்சுகளை அமையுங்கள்.. கவனம் .. அது உங்களுக்கு மட்டும் அல்ல , பல பேரும் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளாக இருப்பது அவசியம்..
உதாரணம் :-
1. ஒரு கப்பல் , பனிபாறையில் மோதி மூழ்குகிறது. ஹீரோ தப்பிகிறான் என்பது பழசு.. ஏழை இளைஞன் , நிச்சயிக்கப்பட்ட பணக்கார ஹீரோயினை காதலிக்கிறான். காதல் கைகூடும் போது கப்பல் மூழ்கி காதலன் இறக்கிறான்.. இது உணர்வுபூர்வமாக டச் செய்யும். (Titanic)
2. டைனோசர் உயித்தெழுவது , தட்டையான திரைக்கதை. சிறுவர்களை வெறுக்கும் மனிதனும் , சிறுவர்களும் டினோசர்களிடம் மாட்டி தப்பிப்பது புதுசு.( jurassic park -1 )
3. பண்டோரா கிரகத்தின் மீது மனிதர் படையெடுப்பு , தட்டை... மனிதனாக , அவர்களுக்கு எதிரணியிடமும் நாவியாக ஒரு காதலனாகவும் இருப்பவன்... புதுசு..( avatar )
இன்னும் பல உண்டு... ஒரு மூன்றாவது நபராக நினைத்துக்கொண்டு உங்கள் திரைக்கதையை படியுங்கள்.. இப்போது உங்களை நீங்களே கேளுங்கள் .. இதில் உணர்வுபூர்வமான முடிச்சு உண்டா ?
தொடரும்...
No comments:
Post a Comment