நம்ம குழும நண்பர்களே. ... இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. ....சும்மா ஒரு கற்பனை. . அவ்வளவுதான் பா. ..
நம்ம கவுண்டரோட "ஆல் இன் ஆல் அழகுராஜா" கடைக்கு ஆட்கள் தேவை னு விளம்பரம் போட்டிருக்காறு... அத படிச்சிட்டு , நம்ம கம்பெனி நண்பர்கள் வேலை கேட்டு போறாங்க....
கவுண்டர் : ஏன்டா பிசாசு மண்டையா... விளம்பரம் குடுத்தா "ஓஹோ " னு வருவீங்க னு சொன்ன... ஒரு நாய் கூட கடை பக்கம் எட்டி பாக்க மாட்டேங்குதடா ...
செந்தில் : அண்ணே. ...!! அங்க பாருங்க னே .. யாரோ மொபைல நோண்டிகிட்டு , நம்ம கடை பக்கம் வராங்க. ..
கவுண்டர் : யார்ரா இவன்... அவசரத்துல செஞ்ச அதிரசம் மாதிரி. ..
(வேலை கேட்டு நஜீப் வருவருகிறார் )
நஜீப் : job vacancy இருக்கா ?
( கவுண்டர் , செந்திலிடம் மெதுவாக )
டேய்... என்னடா இவன்.. தஸ் புஸ்ஸு னு பேசுரான் ... பெரிய படிப்பாளி போல டா. ..
செந்தில் : அப்படி தான் போல னே...
கவுண்டர் : அய்யா கு என்ன மாதிரி வேலை வேணுமுங்க. .. ?
நஜீப் : எனக்கு தனி ரூம் வேணும் , 24 மணி நேரமும் நெட் இருக்கனும் , கைல கறை பட கூடாது. .. முக்கியமான விஷயம் .. லிமிட் சுவிட்சுனு எதையும் என் கண்ணுல காட்ட கூடாது !!!
கவுண்டர் : அப்படிங்களா...!! அப்படியே கொஞ்சம் இப்படி வா........
ஙொங்கமக்கா....
( எட்டி ஒரு உதை விடுகிறார் )
செந்தில் : அண்ணே. ... எவனோ ஒருத்தன் தரைய பாத்துகிட்டே நடந்து வரான் னே...
( சுபாஷ் வேலை கேட்டு வருகிறார் )
கவுண்டர் : டேய்... கொஞ்சமா முடி மொளச்சி , கொஞ்சமா முடி மொளைக்காத மண்டையா ...!! சுவத்துல மோதிக்க போற... உள்ள வா நாயே...
சுபாஷ் : ஹலோ. ... நான் DME படிச்சிருக்கேன். .. கொஞ்சம் மரியாதையா பேசுங்க. ..
கவுண்டர் : ஏன்டா பீர்க்கங்காய் மண்டையா .... அவனவன் BE படிச்சிட்டு பிச்ச எடுக்குறான் ...நீ DME படிச்சிட்டு லவுட்ட பாரு.... சரி... என்ன மாதிரி வேலை தெரியும் உனக்கு ?
சுபாஷ் : என்ன சுத்தி நிறைய தங்கச்சிங்க இருக்குற மாதிரி ஒரு வேல போட்டு குடுங்க ....
கவுண்டர் : டேய்ய்ய்... என் பக்கத்துல பாத்தியா ? நல்லா கருகரு னு கருஞ்சட்டை கலர்ல ஒருத்தன் இருக்கான் ... அவன ஏவி விட்டேன் , உடம்புல முக்கா கிலோ கறி காணாம போயிரும் ... ஓட்ராரா ...
( திவ்யாவும் , மகாவும் வராங்க )
கவுண்டர் : ஐ..... லேடீஸ். .. லேடீஸ். ..
செந்தில் : எண்ணனே... திடீர்னு தெம்பா ஆகிட்டீங்க ?
கவுண்டர் : அங்க பார்ரா... நம்ம கடைக்கு பொண்ணுங்க வராங்க !!!
வாங்கோ... வாங்கோ... உங்களுக்கு என்ன மாதிரி வேலை வேணுமுங்க ?
திவ்யா : நானும் என் பிரண்டும் பேசிகிட்டே நடப்போம்... அதுக்கு ஒரு 10 ஏக்கர் நிலம் இருக்கனும். .. அப்புறம் போர் அடிச்சா அரைக்க , ஒரு கிரைண்டரும் 2 கிலோ அரிசியும் இருக்கனும் ... அப்படி ஒரு வேலை குடுங்க. ..
கவுண்டர் : ஆஆஆ. ... அம்மா தாயே. ... மக்கள பெத்த மகராசி..!! இன்னைக்கி காலைல தெரியாத்தனமா , இந்தா பக்கத்துல ஒரு பன்னி பம்பிட்டு நிக்குதே. .. அது மூஞ்சில முழிச்சிட்டேன்... அதுக்காக இப்படியா மா... நீங்க போய்ட்டு வாங்க தாயி...
( கடைசியாக நம்ம பிரஷாந்த் வரார் )
கவுண்டர் : டேய் பச்சிலை புடிங்கி .... இது ஆவுரதில்ல டா...
செந்தில் : இருங்கண்ணே.... அடுத்து வர ஆளு , எப்படியும் செம கிராக்கி யா இருக்கும் னு என்னோட உள் ஞானம் சொல்லுது னே....
கவுண்டர் : ஏன்டா டிபன்பாக்ஸ் தலையா ... எங்களுக்களாம் அறிவு , அறந்து வெளியவா தொங்குது ? நீ வீட்டுக்கு வா பேசிக்கிறேன்...
பிரஷாந்த் : ஹாய். ...
கவுண்டர் : தம்பிய பாத்தா , ரொம்ப அமைதி டைப்பா தெரியுது ...
பிரஷாந்த் : ஆமாங்க... என்னோட Face cut யே அப்படித்தான். ...
கவுண்டர் : அய்யோ. .. இது சாதாரண மூஞ்சா ? எப்பேர்பட்ட மூஞ்சி. ....!!! காலைல வேலைக்கு போறவன் இந்த மூஞ்ச ஒரு முறை பாத்துட்டு போனா போதும் ...
(த்துத்துது....)
அன்னிக்கு பொழுது விளங்கி வீடு விட்டு போயிடும் ...
பிரஷாந்த் : சரி விடுங்க. .. வேலை டீட்டியல் பத்தி பேசனும்... அந்த கொட்டாய் குள்ள வரீங்களா ?
கவுண்டர் : உன்ன பாத்தா காத கடிச்சி வக்கிறவன் மாதிரியே இருக்க.. எதுக்கும் தள்ளி நின்னு பேசனும். .. சரியா..?
( கவுண்டரும் பிரஷாந்தும் 3 மணி நேரம் கழித்து வெளியே வருகிறார்கள். .. கவுண்டர் மட்டும் காதை பிடித்தபடி தள்ளாடி வந்து உட்காருகிறார் )
செந்தில் : மூனு மணி நேரமா அப்படி என்னனே பேசுனீங்க ?
கவுண்டர் : ஏன்டா. .. அவனுக்கு இருக்குறது வாயா இல்ல வரைஞ்சி எடுத்தாந்தானா னு தெரியல டா...
செந்தில் : எண்ணனே ஆச்சி ?
கவுண்டர் : ஆஆஆ ஆஆ. ....
உள்ள போயி உக்காந்தது தாண்டா தெரியும் ... அப்புறம் அவன் பேச , நான் கேக்க - நான் கேக்க , அவன் பேச ..... ஷ்ஷ்ஷ். .. கண்ண கட்டுதுடா சாமி....
கடை ஒரு வாரத்துக்கு லீவு டா...