காஞ்சனா 2 - பாத்தா பாரு , பாக்காட்டி ஓடு !
வணக்கம் நண்பர்களே. ... அமெரிக்க அதிபரின் ஆணைக்கிணங்க, ரொம்ப நாளா தூங்கி கிடந்த என் பிளாக் ல ஒரு போஸ்ட் போடரேன் ( ஒபாமா மன்னிப்பாராக )
எல்லாரும் "குடும்ப படம் , ஆஹா ஓஹோ "என புகழ்ந்த காஞ்சனா 2 வை நேற்று தான் பார்த்தேன். அதைப்பற்றி. ...
கதைச்சுருக்கம் :-
எல்லாருக்கும் கதை தெரியும் என்றாலும் , பிளாக் விதிகளுக்கு (!!!) உட்பட்டு இதை எழுதுகிறேன். .
TRP rating ல் முதலிடத்தில் வர போராடுகிறது "கிரீன் டிவி " . இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வருவதற்காக , பேய் பற்றிய தொடரை வெளியிட தீர்மானிக்கிறார்கள் . கேமரா மேன் ராகவா லாரன்ஸ் உடன் டாப்ஸி தலைமையிலான குழு , பீச் பக்கத்தில் இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய் இருப்பது போன்று பொய்யாக காட்சிகள் எடுக்கிறார்கள். இவர்களின் செயலால் தூண்டப்படும் , உண்மையில் அங்கு வாழும் பேய் இவர்களை ஆட்டுவிக்கிறது . அதை விரட்ட முற்படுகையில் அங்கு பல பேய்கள் இருப்பதும் , அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமும் தெரிய வருகிறது. பின்னர் அந்த பேய்கள் பழிதீர்ததா என்பதே கிளைமாக்ஸ். ..
அப்பாடா ..!!! இனி அலசி காய வைக்கலாம்
முன்பாதி அலசல் :-
டாப்ஸி. .. !!! இந்த வருடத்தின் இனிமையான அதிர்ச்சி. . ஆடுகளத்தில் ரோபோ நடிப்புடன் , பின் வந்த படமெல்லாம் தோல்வியை தழுவ நடிக்க தெரியாத ராசியில்லாத நடிகை என தமிழ் சினிமாவில் ஒதுக்க பட்டவர். . அந்த வெறியேல்லாம் இப்படத்தில் நடிப்பால் கொட்டி தள்ளி விட்டார். . !! அவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என ஏதோவொரு பிளாக் ல் படித்த நினைவு. . அவரின் கதாபாத்திர குணாதிசயத்தை பார்ப்போம்...
ஒரு பெரிய நிறுவனத்தில் ஓனரின் நம்பிக்கை பெற்றவர் சாந்தசொரூபியாக இருக்க மாட்டார். அவரை உற்று கவனித்தால் ஒரு ஆண் தன்மை வெளிப்படும். குழு தலைவி , மற்றவர்களை அதிகாரமாக விரட்டுவார் (அது ஹீரோ வாக இருந்தாலும் சரி ) , அந்த ஹோட்டலில் நின்று பேசும் போது கூட அனைவருக்கும் முன்னதாக நின்று பேசுவார். பெண்மை தனமான உடை இல்லை. சட்டையோடவே வலம் வருவார். சிம்பிளாக இழுத்து வாரபட்ட முடி என அந்த கதாபாத்திர வடிவாக்கம் அருமை.. இடைவேளை காட்சியில் , பேய் தன்னை நெருங்கும் போது பயத்தில் அலறி பின்னர் பேய் தனது உடம்பில் ஏறியதும் , ஒரு பல்டி அடித்து ( அரண்மனை பட ஆன்ட்ரியா டைப்பில் ) உட்கார்ந்து ஒரு பேய் சிரிப்பு சிரிப்பார் பாருங்கள். .. அதகளம். இது ஒரே ஷாட் என்பதை மனதில் கொள்க !!!
ராகவா லாரன்ஸ், கோவை சரளா நடிப்பு அருமை.. மற்றும் ஸ்ரீமன். பேய்க்கு பயந்து நடுங்கும் காட்சிகள் சூப்பர். மற்றபடி முந்தைய படங்களின் வந்த கதாபாத்திர தோரணை என்பதால் விரிவான அலசல் இல்லை.
முன்பாதி குறைகள் :-
அந்த பாத்ரூம் காட்சி படு அபத்தம். ஓரின ஈர்ப்பு என்பது ஒரு உணர்வுபூர்வமான வெளிப்பாடு மற்றும் குற்றம் இல்லை எனினும் , திரையரங்குகளில் இருப்பவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற மட்டுமாவது அக்காட்சியை நீக்கி இருக்கலாம். .. :(
ஒரு பேய் படத்தில் காட்சியமைப்புகள் தான் பயத்தை வரவழைக்க வேண்டும். .. அது இப்படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங். ... உதாரணமாக " ஒரு கதாபாத்திரம் ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்து பார்க்கிறது. யாரும் இல்லை. தனது பயத்தை எண்ணி சிரிக்கும் போது , திடீரென ஒரு உருவம் அவரின் பின்னால் கிராஸ் ஆகும். இவர் பயத்துடன் திரும்பி பார்த்தாள் , முகத்திற்கு அருகில் வந்து ஒழுங்கு காட்டும்...!!! சாரி பயமுறுத்தும். .. " ..... இதுபோன்ற சீன்களெல்லாம் ஆதிமனிதன் காலத்திலேயே அழிந்து விட்டது ஐயா... முடியல. ..
இந்த இடத்தில் ஒரு காட்சியை கூறுகிறேன். . Paranormal activity எனும் படத்தில் வரும் காட்சி. .. "ஒரு பெண் சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பாள்.. அந்த இடம் முழுக்க பொருட்கள் நிரம்பி வழியும். . வெளியில் சத்தம் கேட்டு சென்று விட்டு மீண்டும் சமையலறை க்கு வருவாள். இது ஒரே ஷாட்டில் படமாக்க பட்ட காட்சி. கேமரா 5 விநாடி அவள் பக்கமாக திரும்பி பின் சமையலறை யில் வந்து நிற்கும். உள்ளே நுழைந்த பெண்ணிற்கு அதிர்ச்சி. .. !!! அனைத்து பாத்திரங்களும் மேற்கூறையில் ஒட்டி கொண்டிருக்கும் .. 6 வது விநாடி தொப் என்று கீழே விழும்.... அக்காட்சியை எப்படி படமாக்கினார்கள் என சத்தியமாக இப்போதும் எனக்கு தெரியவில்லை. . அதுதான் பயமுறுத்துதல் ...
பின்பாதி அலசல் :-
முன்பாதியில் டாப்ஸி என்றால் , பின்பாதியில் நித்யா மேனன். .. !!! இவரும் திறமை வெளிப்படாமல் ஒதுக்கபட்டவர் தான். . இதில் கால் ஊனமுற்ற மாற்றுதிறனாளி யாக வருகிறார். ..
இந்த வகை பாகங்களில் பிளாஷ்பேக் ல் வருபவர் , தற்போதைய சமூகத்தால் வஞ்சிக்கப்படும் கதாபாத்திரமாகவே அமைக்கும் முறைக்கு சபாஷ். . முதல் பாகத்தில் வெள்ளந்தியான ஊர் தலைவன் , இரண்டாம் பாகத்தில் திருநங்கை , மூன்றாவது பாகத்தில் மாற்றுதிறநாளி... பலே...பின்பாதியில் முக்கியத்துவம் உள்ள நித்யா மேனன் கதாபாத்திரம் பற்றி பார்ப்போம்..
ஏன் இவ்வளவு கோபமான பாத்திர படைப்பு என கேள்வி எழலாம். .. சாலையில் ஏடாகூடமாக வண்டி ஓட்டும் போது , பக்கத்தில் இருக்கும் வண்டிக்காரன் "பாத்து போடா பரதேசி " என திட்டும்போது நமக்கு கோபம் வருகிறது... நம்மீது தவறு இருந்தும் அதற்கான பழிச்சொல்லை ஏற்க முடியவில்லை நம்மால். . எந்த. தவறும் செய்யாத ஆனால் சமூகத்தின் கேலிக்கு ஆட்படும் "பெண்" , நிச்சயம் கோபக்கனலாகத்தான் இருப்பாள். .
அந்த கோபத்தின் வெளிப்பாடே , அவள் தோழியிடம் முறைத்துக்கொள்வது .. இதில் ஒரு காட்சியில் நித்யா மேனனின் நடிப்பு அபாரமாக வெளிவரும்.. அறிமுக காட்சியில் கால் தாங்கி நடந்து வருவார். படிகட்டில் ஏறும் சீனில் ஊனமுற்ற காலை தூக்கி வைத்து நடக்கும் காட்சி அற்புதம். .. அவர் நன்றாக ஹோம் வொர்க் செய்தது தெரிகிறது. .
லாரன்ஸ். .. முன்பாதியில் அடக்கி வாசித்ததால் , இங்கு அடித்து ஆடி இருக்கிறார்.. ஆனால் முக்கியத்துவம் இவருக்கா ? நித்யா மேனனுக்கா ? என திரைக்கதை குழப்புகிறது..
பின்பாதி குறைகள் :-
முந்தைய பாகங்களில் இருக்கும் பிளாஷ்பேக் ன் அழுத்தம் இதில் கொஞ்சம் குறைவு... மாற்றுதிறநாளிகளின் அவல நிலை யை இன்னும் சொல்லி இருக்கலாம். ..
தொலைக்காட்சி வெற்றி என சென்ற கதை சுத்தமாக டிராக்கை விட்டு வேறெங்கோ சென்று விட்டது..
அந்த கிளைமாக்ஸ் காட்சி. .. ஷ்ஷ்ஷ் யப்பா. .. முடியல. .. படத்துக்கு திருஷ்டி வைத்தது போல...
மொத்ததில் :-
இப்போதைய சூழ்நிலை யில் நல்ல படம். இன்னும் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய படம்..