Thursday, 2 April 2015

It's a boy girl thing - விமர்சனம்

வணக்கம் நண்பர்களே. ..

சில மாதங்களுக்கு முன்பு பார்த்த படம் தான் its a boy girl thing.  கதை என்னவோ நம்ம ஊரு கூடு விட்டு கூடு பாயும் கதை தான். .. ஆனா சொன்ன விதம் சூப்பர். ..

ஒரே கல்லூரியில் படிக்கும் ஹீரோ ' வும் , ஹீரோயினும் எதிரும் புதிருமாக இருக்காங்க ..(இத்தனைக்கும் இவங்க பக்கத்து வீடு) இத பார்த்து காண்டான கடவுள் , அவங்க ஆத்மாவ மாத்தி விடறார்..

அடுத்த நாள் அவங்க கண் விழிக்கும் போது , தன்னுடைய உடம்பு மாறி இருக்கிறத பார்த்து அதிர்ச்சி ஆகிறாங்க. .. அவங்க அதை உணர்ர காட்சி அற்புதமாக இருக்கும். . அதிலும் அந்த பெண்ணோட நடிப்பு. .. சான்சே இல்ல...!!!!

படத்தோட முடிவு குழந்தை கூட சொல்லிடும்.. ஆனா அது வரைக்கும் கதை தொய்வில்லாம போகுது. .. இதுக்கு நடுவுல அவங்களுக்குள்ள காதல் அருமையா வளருது...

ரசித்த காட்சிகள் :-

1. ஆணுக்குறிய முகபாவங்களோடு அந்த பெண் நடித்தது...

2.  சுத்த சைவமான பெண் (இப்போது ஆண் வீட்டில் , அவனது உடம்பில் ) பன்றி இறைச்சி யை சாப்பிடும் காட்சி...

3.  தன்னைப்பற்றி ஹீரோயின் அடித்த கிண்டலை , ஹீரோ கேட்கும் போது காட்டும் கோபம். . (இப்போது பெண் உடம்பில் )

என்ன தலை சுற்றுதா...!!! படத்தை பாருங்கள். . நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். .

No comments:

Post a Comment