பாகம் ஒன்று
இடம் :- நியு ஜெர்சி , அமேரிக்கா ( தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி )
அதிகாலை , நல்ல உறக்கத்தில் இருந்து எழுந்தாள் "கேத்ரின்" ... வயது 20 , அழகான தோற்றம். இவளது தந்தை "ரிச்சர்ட்", ஒரு அமெரிக்க பெண்ணிற்கும் , தமிழறக்கும் பிறந்தவர். .. அதனாலேயே தமிழ் பற்று காரணமாக , ஒரு அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.... தனது மகளான கேத்ரினை கூட ஆங்கிலம் முதல் மொழியாக இருந்தாலும் , தமிழை கற்க வைத்தார். ... பார்போரை மயங்க வைக்கும் அழகியான கேத்ரினை , என்னேரமும் உறவினர்கள் கண்கானிப்பிலேயே வளர்த்தார்... அதனால் தான் என்னவோ , அவளுக்கு ஊர் சுற்றுவதில் அலாதி பிரியம். .. ஆனால் தாயின் சொந்த ஊரான தமிழ் நாட்டை பற்றி தெரியாமலே வளர்ந்தாள் ... அவளது 12 ஆம் வயதில் தாயை ஒரு விபத்தில் இழந்தாள்... அதுமுதல் தன் குடும்பத்துடன் நெருக்கமாக பழகினால்.. தன் மனக்கவலை மாற...
இந்நிலையில் தான் , அந்த கொடூர செய்தி கேட்டு எழுந்தாள்..ஒரு வாரத்திற்கு முன்பு பணி நிமித்தமாக தமிழ்நாடு சென்ற ரிச்சர்ட் , தீ விபத்தில் சிக்கி முழுவதுமாக எரிந்து போனார் என்று. . அவரது உடலை கூட வாங்க முடியாத நிலை. சாம்பல் கூட மிச்சமில்லை என தகவல் வந்தது எமபஸியிடமிருந்து .. ரிச்சர்ட் பெரிய தொழிலதிபர் ஆதலால், மிகுந்த மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. .
தந்தையும் தாயும் இழந்து அனாதையாக நின்ற கேத்ரின் , யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்தாள்... அவள் வீட்டிலேயே தங்கி இருந்த அவளது மாமா லாரன்ஸ் , அவளை தேற்ற என்னவேள்ளாமோ செய்து பார்த்தார்.. தந்தையின் நண்பர் எட்வர்ட் ,
"தனியா எப்படிமா இருப்ப ? என்று மகனை திருமணம் செய்து கொள். உன்னையும் உனது சொத்துகளையும் நான் பார்த்து கொள்கிறேன் "
" இப்போ எதற்கு அங்கிள் இந்த பேச்சு. . நடக்கும் போது பாக்கலாம்"
கேத்ரின் மனதிற்குள் பொறுமினாள் ,"இவனை எல்லாம் நண்பன் என தந்தை நம்பி இருக்காரே?"
இரண்டு நாட்கள் கழிந்தன....... வீட்டை அடுக்கி கொண்டிருந்தாள் கேத்ரின். தனது மாமாவின் பச்சை நிற பனியன் பின்புறம் ஒரு துண்டு கிழிந்து இருந்தது. அவரது கண்ணாடி விரிசல் விட்ட வாட்ச் என எல்லாவற்றையும் பார்த்து பழைய நினைவுகளை அசை போட்டாள்... சுய கௌவரவம் பார்க்காத அவரது எளிமை...அடிக்கடி தனிமையில் இருக்கும் போது தன் கண்ணில் சிகப்பு நிற ஒளியை அடிக்கும் தந்தை. .. தன் செலவுக்கு அதிகமாக பணம் கொடுத்து அனுப்பும் பாட்டி என அழகான குடும்பம் பொலிவிழந்ததை எண்ணி , அவள் மனவருத்தம் அதிகமானது...இத்தனைக்கும் அவள் முழுநேரமும் உறவினர்கள் பார்வையில் இருந்தாள்..எனினும் தனிமை அவளை வாட்டியது.
இந்நிலையில் , திடீரென ஒருநாள் அவளுக்கு இன்ப அதிர்ச்சி. அவளது Mail' க்கு , அவள் photography competition ' க்கு செலக்ட் ஆகி விட்டாள் என செய்தி வந்தது... photography அவள் உயிர். தனது தோழிகளுடன் சேர்ந்து இதை செய்து வந்தாள். இந்த எதிர்பாராத செய்தியால் அவள் மகிழ்வாள் என நினைத்த குடும்பத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாமா லாரன்ஸ் அவளிடம் ,
"இந்த செய்தி உனக்கு மகிழ்ச்சியாக இல்லையா மா ?"
"மகிழ்ச்சியான செய்தி தான் மாமா ... வந்த நேரம் தவறு.."
"வீட்டிலேயே இருந்தால் அப்படி தான் மா இருக்கும் .. அந்த photography competition சீனா ல நடக்கும். சந்தோஷமா போய்ட்டு வா மா. .."
"சரி மாமா"
பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுடன் New Jersey airport சென்றாள்... மணி 9.00 pm ஆகியிருந்தது..போன் சிணுங்கியது ..
" ஹேய். .. கேத்ரின் !! நாங்க already வந்துட்டோம் டி... நீ எங்கே இருக்க ?"
" Airport டி"
"என்னடி.. இன்னும் கிளம்பளியா ? சீக்கிறம் டி "
"எனக்கு வர பிடிக்கல டி.."
"அப்புறம் ஏண்டி airport வந்த ? சரி இப்பவே அங்க , மணி 9 க்கு மேல ஆகிடிச்சி போல... நீ அங்கேயே ரூம் ல தங்கிட்டு காலைல வீட்டுக்கு போரியா ? இல்ல இப்பவே வீட்டுக்கு போறியா ?"
"இரண்டும் இல்லை. .. தமிழ்நாட்டுக்கு போனேன். ."
"என்னடி சொல்ற. .? உங்க வீட்...."
" Call Ended"
------/-------
இடம் :- சைதாப்பேட்டை
நேரம் :- 6.25 am
குமார். .. ஒரு சாதாரண உதிரி பாகங்கள் செய்யும் இடத்தில் வேலை பார்ப்பவன்.. சற்றே புத்திசாலி. . முந்தைய நாள் , முதலாளி திட்டியதால் நண்பன் ஜகா வுடன் சரக்கு அடித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்தவன் , காலையில் தான் போதை தெளிந்தது. .
" டேய் ஜகா... இன்னைக்கு கம்பெனி லீவு போடலாம்னு இருக்கேன் "
"இன்னைக்கும் ஓசி சரக்கு அடிக்க பிட்டா... எழுந்து கிளம்புடா.. டேய்"
"மச்சி. . மேல பாரேன் .. கிழக்குல இருந்து மேற்க்குக்கு ஒரு பிளைட் போகுது. அப்போ எதிர் பிளைட் வரும்ல மச்சி ? "
"அது எப்படிடா ... சரக்கடிச்சா சம்பந்தமே இல்லாம பேசுர ? போய் கம்பெனிக்கு கிளம்புடா"
"ஓனர் திட்டும்போது , எல்லா பொண்ணுங்களும் பாத்திடுச்சி மச்சி.. அசிங்கமா இருக்கு"
"விடுடா.. அங்க இருக்குறது எல்லாம் ரதிங்க பாரு ..."
"அதுங்க கூட எனக்கு ஓகே ஆகல மச்சி"
" வேற நல்ல பொண்ணா கிடைப்பா டா.. விடு.. நீ சாக்கு சொல்லிகிட்டே மாடில இருக்காத.. எழுந்து வாடா.."
"நீ வேணா பாரு மச்சி. . சும்மா வெள்ளக்காரி மாதிரி ஒரு பொண்ண உஷார் பண்றேன் "...
------/------
இடம் :- சென்னை க்கு ஒதுக்குப்புறமாக ஒரு பாழடைந்த இடிந்த கட்டிடம்.
நேரம் :- 6.20 am
ஆளுயர குழி.. அதை சுற்றி 4 ,5 பேர்.. நடுவில் ஒரு முரடன். . குழிக்குள் ஒரு அப்பாவி.
"அண்ணே... கேஸ கூட வாபஸ் வாங்கிடறேன் னே.. குடும்பத்தோட எங்கயாவது போயிடறேன் னே.. என்ன விட்டுடு னே..."
"அத நான் முதல்ல நல்லபடியா சொன்னப்பவே பண்ணிறுக்கனும்... உயிர் பயம் காட்டுனா தான் ஒத்துக்குவியா டா ?"
"அண்ணே...."
"டேய். . அவன் தலையில அடிச்சி , அவன புதங்கைடா. ... உயிர் போக கூடாது. . அவன் சாகுறத அவனே பாக்கணும். "
ஐந்தே நிமிடத்தில் அவனை மண்ணை போட்டு உயிருடன் புதைத்தார்கள். பின்னர் அந்த முரடன் தன் கார் டிக்கியில் இருந்த செடியை அங்கே நட்டான்...
"எவ்ளோ ஆட்டம் காட்டினான். . இப்போ பாரு.. என் செடிக்கு உரமாகிட்டான் ...
ஹாஹாஹா ..."
சொல்லி முடிக்கவில்லை போன் சிணுங்கியது..
"ஹலோ"
"அண்ணே.. நான் new Jersey ல இருந்து டேவிட் பேசுறேன் னே"
"சொல்லுடா. . போன இடத்துல மாட்டிகிட்டியா ?"
"இல்லனே. .. அவரு போட்ட பிளான் சூப்பரா வொர்க் ஆகுது னே...
சிட்டு ... நம்பள நோக்கி தான் பறந்து வருது னே...
ஹாஹாஹா ...."
தொடர்ச்சி ... அடுத்த பாகத்தில். ..

நல்லா எழுதறிங்்க தல . ஆனா , ஸ்கிரின்ப்ளே டைப்ல எப்பவும் ப்ளாக்ல எழுதாதிங்க . ஏன்னா திரைக்கதை என்பது நமக்குக்காட்சிப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படும் வஸ்து . ஆனா , நம்ம ஆளுங்களுக்கு திரைக்கதைனா என்னன்னே தெரியாது . அதுனால கதை பார்மெட்லயே ஆரம்பிங்க . ப்ளாக் பிக்கப் ஆனதும் ஸ்கிரின்ப்ளே ெழுத ஆரம்பிச்சிடுங்க . இப்பவே எழுத ஆரம்பிச்சிட்டா , படிக்கறவங்களுக்கு புரியாது ....
ReplyDeleteஅட , ப்ளாக்குக்கு பேர் கூட விமர்சன உலகம் தானா ? ஒரு உறையில் இரு கத்திகள் .... ஹா ஹா ஹா ...
நன்றி தல . .. மூன்றாவது பாகத்தில் இருந்து கதை நடைக்கு மாறிடரேன் தல...!!! (இரண்டாம் பாகம் ஏற்கனவே போட்டுட்டேன்)
Delete