Tuesday, 15 December 2015

அமெரிக்கா டூ சைதாப்பேட்டை - கடைசி பாகம்

கடைசி பாகம். ...

பயம் , துரோகம் என எல்லா உணர்வுகளும் குழம்பிய நிலையில் இருந்தாள் கேத்ரின். .. அந்த பெட்டியினுள் இருந்த ஆவணம் , அவளது மொத்த நம்பிக்கையையும் புரட்டி போட்டது. . அந்த உணர்வு தாளாமல் தான் அப்படி கத்தினாள். .. அந்த பயம் உணர்வே அவர்களை இன்னும் இக்கட்டில் மாட்ட வைத்தது. ..

அவள் போட்ட சத்ததில் , பக்கத்து ரூமில் இருந்து ஆட்கள் கதவருகில் வந்து விட்டனர் ... குமார் சாவி துவாரம் வழியாக பார்த்தான்..

"அடக்கடவுளே. .. அதே ரவுடிகள் ..!! சிம் கார்டை உடைத்த பின்னும் எப்படி வருகிறார்கள் ? ஒருவேளை , நான் அங்கே சென்று வெயிட் பண்றேன்னு சொன்னது இங்கே தானா..? எங்களோட திட்டம் , இவங்களுக்கு எப்படி தெரியுது ? " பல எண்ணங்கள் குமாரின் மனதில் அலைமோதின...

"குமார். .. உன் கிட்ட ஒரு அதிர்ச்சியான  உண்மை சொல்லனும்.."

"அப்புறம் பேசலாம் கேத்ரின். .. இப்போ பெரிய பிரச்சினையில மாட்டிகிட்டோம் " என்றவாறே கீழே தரையை பார்த்தான்...

அந்த தீ விபத்தின் போது , கதவருகில் ஏதோ வெடித்து தரையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. . கீழ்தளம் தெரியும் அளவிற்கு ஹோட்டல் நிர்வாகம் அதை உடைத்து , தற்காலிகமாக அதன்மேல் மரப்பலகைகளை வைத்து மூடி இருந்தனர். . இதைபார்த்ததும் சரேலென ஒரு யோசனை குமாருக்கு உதித்தது...

" கேத்ரின். .. வெளியே அதே ரவுடிகள் எப்போ வேணாலும் கதவை உடைச்சிகிட்டு உள்ளே வரலாம். . இந்த மரப்பலகைய எடுத்துடுவோம் .. எப்படியும் வாட்டசாட்டமான ஆளுங்க தான் முதல்ல உள்ள வருவாங்க.. இந்த குழிக்குள்ள அவங்க விழுந்ததும் , கடைசியா இருக்குற ஆளுங்கள நாம சமாளிக்கலாம் " என்றான். . மரப்பலகயை எடுத்து ஓரம் போட்டனர்... இவ்வளவும் சில நொடிப்பொழுதில் நடந்தேறியது. ..

இருவரும் கதவின் இரு ஓரங்களில் மறைந்து நின்றனர்... கதவை சில பேர் வேகமாக முட்டி தள்ளுவது தெரிந்தது. . இன்னும் சில நொடிகள் தான். . உள்ளே வந்துவிடுவார்கள். ..

"குமார். .. தயவுசெய்து கேளு... உன் கிட்ட அந்த உண்மையை சொல்லனும் "

" ஷ்ஷ்ஷ்"

சில நொடிகள் அமைதியாக இருந்தது. .

" டமாமார்ர்ர்....."

கதவை உடைத்து கொண்டு வெறித்தனத்துடன் பாய்ந்தனர் ரவுடிகள். .. முதலில் ஓடிவந்த 7 பேரும் தலைகீழாக கீழ்தளத்தில் விழுந்தனர். . வெளியில் நின்றிருந்த 2 சுமாரான ரவுடிகளை அடித்து பள்ளத்தில் தள்ளினான் குமார்...

" கேத்ரின். .. சீக்கிரம். . இந்த மரப்பலகைய வச்சி பள்ளத்த மூடு... நாம ஐன்னல்  வழியா இறங்கி வெளியே போயிடுவோம் "  ...

குமாரும் கேத்ரினும் வேகவேகமாக பள்ளத்தை மூடிவிட்டு ஜன்னல் அருகே ஓடினார்கள். . மீண்டும் கதவருகே யாரோ வந்தனர். .. தொடங்கியதை பாதியில் விட்டு விட்டு போக கூடாது.. வருபவனாலும்  பிரச்சினை வரலாம் என்று எண்ணி , கேத்ரினை பெட்டிக்கு அருகே ஒளியவைத்து விட்டு , சற்று தள்ளி அவனும் ஒளிந்து கொண்டான்..

" குமார். ....."

" கேத்ரின். . ஷ்ஷ்ஷ். . கொஞ்சம் அமைதியாக இரு.." மெல்லிய குரலில் எச்சரித்தான் குமார். .

இதற்குள் அந்த மனிதன் உள்ளே வந்து விட்டான்...

" கேத்ரின். .. நான் தான் மா , லாரன்ஸ் மாமா. .. எங்கமா இருக்க ? "

குமார் ஆசுவாச பெருமூச்சு விட்டான். .. வந்தவர் எதிரி இல்லை என தெரிந்ததும். . பெண்ணின் மீது உள்ள பாசத்தால் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்  போல... என்று நினைத்தவாறே எழுந்தான். ..

" சார்... நாங்க இங்க இருக்கோம். .. சீக்கிரம் இங்க வந்து மறைஞ்சி நில்லுங்க. .. இங்க ரவுடிகள் இருக்...."

" குமார். .. வேண்டாம். . போகாதே. .." அவன் சொல்லி முடிப்பதற்குள் கேத்ரின் கத்தினாள். ..

குமார் குழம்பியவாறே நிற்க...  லாரன்ஸின் பாக்கெட்டில் இருந்து ஒரு புதிய ரக பிஸ்டல் குமாரின் நெஞ்சை குறிபார்த்தது ...

" டுமீமீல்ல்ல்....."

குமார் அப்படியே பின்பக்கம் சரிந்தான்..கேத்ரின் கதறியபடி ஓடி வந்து அவனை தன் மடியில் தாங்கினாள்...

சில நொடிகளில் மரணம் தன்னை தழுவ போகிறது " என்பதை உணர்ந்தான் குமார்...

"ஏன் மாமா இப்படி ?? உங்கள எவ்வளவு நம்பினோம் மாமா ? ஏன் இந்த துரோகத்தை செய்தீங்க ? "கேத்ரின் கதறினாள். ..

" ஹாஹாஹா. ...கேத்ரின்...!!!
.
சாகறதுக்கு முன்னாடி உண்மைய தெரிஞ்சுகிட்டு சாகு....!!
.
.
.
.
எனக்கு நீங்க பண்ண துரோகம் அப்படி ... உன் அப்பன் ரிச்சர்ட் , தொழில் தொடங்கியதலிருந்து நான் அவன் கூட இருக்கேன். . ஆனா எனக்கான மரியாதை அவன்  தந்ததே இல்லை. . நான் பாடுபட்டு உழைப்பேன் .. அவன் பேரு வாங்கிட்டு போவான். ..அதன் உச்சகட்டமாக என்னை உங்க வீட்டில் ஒரு அடிமை மாதிரி தானே நடத்துனீங்க... உன்னை வளக்கரதுக்காக நான் மட்டமாக்க பட்டேன்..இதிலிருந்து நான் விடுபட ஒரே வழி ..,

உன் அப்பாவை கொல்றது தான்..

அதுக்கு முன்னாடி அவனுக்கு தெரிஞ்ச எல்லா கம்பெனி டீட்டெயிலும் எனக்கு தெரியனும்.. அதெல்லாம் இதோ இந்த சீக்ரெட் லாக்கரில் தான் இருக்கு... அதை திறக்க ரிச்சர்ட் வேண்டும். ... இந்த லாக்கர் அவன் எதிரில் வந்ததும்  படம் பிடிக்கும் - அப்புறம் அவனோட கை அச்சு பிரதி - அப்புறம் அவனோட கண்விழி ஸ்கேனிங். . இதெல்லாம் இருந்தாதான் இது திறக்கும். .

அதுக்காக தான் இந்த ஊரில் ஒரு கான்பிரன்சிங் மீட்டங் அரேஞ்ச் பண்ணி , அவனை வர வச்சேன். .. இரவு நேரம் அவனை இந்த லாக்கரை ஓப்பன் பண்ணா சொன்னா முடியாது னு சொல்லிட்டான்... என் ஆத்திரம் தீர அவனை அடிச்சி கொன்னேன்...

ஹாஹாஹா. ...

ஆமாம் கேத்ரின். .. இந்த கையால தான் உன் அப்பா இறந்தான். ..

ஆனா நான் பண்ண இரண்டு தப்பு... டீடியல்ஸ்  தெரிவதற்கு முன்னாள் அவனை கொன்னது. . இன்னொன்னு , அந்த லாக்கருக்கு எதிரில் அவனை கொன்னது.. அந்த லாக்கர் , நான் அவனை கொன்னதை படம் எடுத்து சேவ் பண்ணிடுச்சி ... அதற்குள் ஆளுங்க வந்ததால் Fier accident மாதிரி நினைக்கனும் னு , இந்த இடத்திற்கு தீ வச்சிட்டு நான் நியூ ஜெர்சி வந்துட்டேன். . இந்த லாக்கர் நெருப்பால் பாதிக்கப்படாது. . அந்த தைரியத்தில் தான் உங்களிடம் வந்தேன்.. இருந்தாலும் நான் கொலை செய்த போட்டோ இந்த லாக்கரில் இருக்கே..

அதை எடுக்கனும்.. கேத்ரின். .. நான் தப்பிச்சே ஆகனும்.. ஆனா இந்த லாக்கரை அதன் இடத்திலிருந்து அசைச்சா , அது அதனுல் இருக்கும் முக்கிய ஆவணங்களை எல்லோருக்கும் மெயில் அனுப்பிடும் .. அதை உடைக்காமல் திறக்க வேண்டிய கட்டாயம்.. இதுக்கு இருந்த ஒரே சாவி.... உன் அப்பா.. அவனும் உயிரோடு இல்லை. . அப்புறம் தான் தெரிஞ்சது , இதனோட மாற்று சாவி நீ தான்...

எஸ்... கேத்ரின். .. நீ தான் எனது துருப்புச் சீட்டு. . !!

உன்னை நியூ ஜெர்சி ல இருந்து இங்க கொண்டு வர முயற்சி பண்ணேன்.. வீட்டுல வேண்டாம் னு தடுத்துட்டாங்க .. அதனால தான் சீனா ல நடக்குற காம்படீஷன் கு நீ செலக்ட் ஆகிட்டனு பொய்யாக ஒரு மெயில் அனுப்பினேன்... உன்னை தூண்டி விட்டேன். . நான் நினைச்ச மாதிரி நீ தமிழ்நாட்டுக்கு வந்த. ..

உன்னை கடத்தி , எனக்கு செய்ய வேண்டியத முடிச்சதும் உன்னை கொல்ல ஒரு லோக்கல் ரவுடிய செட் பண்ணேன். .. உன் அதிர்ஷ்டம். . இதோ செத்துகிட்டு இருக்குரவன் உன்னை தொடர்ந்து காப்பாத்தினான்... இப்போ எல்லாம் முடியபோகுது கேத்ரின். .."

ஹாஹாஹா. ... என சிரித்துக் கொண்டே டிரிக்கரை அழுத்தினான்.. கேத்ரின் , குமாரை பிடித்து கொண்டு கண்களை இருக மூடினாள் ....

ட்ட்ரிரிக்க்க்.............

பிஸ்டல் லாக் ஆகி டிரிக்கர் ஜாம் ஆகி விட்டது. . அதை சரிசெய்ய லாரன்ஸ் முயன்றான்... இதுதான் சமயம் என , வேகமாக எழுந்த கேத்ரின் , லாரன்ஸை கீழே தள்ளி பிஸ்டலை பிடுங்கினாள் .....

" குட் பை மாமா..."

டுமீமீல்ல்ல். ...

லாரன்ஸ் வயது முதிர்ச்சி காரணமாக , துப்பாக்கி குண்டின் வலியை தாளாமல் சரிந்தான். ..

கேத்ரின் , குமாரை தூக்கி தன் மடியில் தாங்கினாள். . இருவராலும் பேச முடியவில்லை. . மெதுவாக மிக அழகாக அவர்களுக்குள் பூத்த காதல் அந்த நொடியில் சேர முடியாத வலியை உணர்ந்தது  .. கேத்ரின் அவன் காதருகில் சென்றாள்...

" குமார்.... என்னால தான் உனக்கு இந்த நிலமை ..என்னை மன்னிச்சுடு. .. லாரன்ஸ பத்தி எச்சரிக்க தான் உன்னை கூப்பிட்டேன். . நீ அதை கவனிக்கல. .. உன் குடும்பத்தை இனி நான் பாத்துக்கறேன்.... உன் கிட்ட நான் சொல்லனும் நினைச்சது....

I love you kumar. ... yes , I love you so much....

இதைகேட்டுக்கொண்டே குமாரின் தலை சரிந்தது... பல வருடங்கள் விசுவாசமாக இயங்கிய இதயம் அன்றோடு தன் துடிப்பை நிறுத்தியது ...குமாரின் மூச்சும் அடங்கியது. . அவனை அள்ளி எடுத்து தன் மார்போடு அனைத்து கதறினாள் கேத்ரின். ..

" ஹாஹாஹா. ..."

திடுக்கிட்டு திரும்பினாள்  கேத்ரின். .. அரைகுறை உயிரோடு இருந்த லாரன்ஸ் , தான் விழுந்த இடத்தில் இருந்த எரியாத துணி , பேப்பரை ஒன்று சேர்ந்து பற்ற வைத்தான்... அதை ரூம் எங்கும் விசிறி அடித்தான். அறை எங்கும் நெருப்பு பரவியது.

"என் சாவு ... சாதாரணமாக இருக்காது கேத்ரின். ." என்று சொல்லியவாறே சரிந்தான் லாரன்ஸ். .. குமாருடைய பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து கொண்டு ஜன்னல் அருகே ஓடினாள். .. அதில் அவனுடைய வீட்டு முகவரியுடன் கூடிய ஆவணங்கள் இருந்தன... ஜன்னல் வழியே குதித்து வெளியே தப்பிப்பதற்கு முன் , ஒரு முறை குமாரை திரும்பி பார்த்தாள். ..

குமார் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தான்... மனதை கல்லாக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தாள்.... குமாரும் , லாரன்ஸும் அடையாளம் தெரியாத படி எரிந்து சாம்பல் ஆனார்கள். ..

✈✈✈✈✈✈✈✈

5 நாட்களுக்கு பிறகு , நகரத்திற்கு வெளியே ஒரு கிராமத்தில். ....

" அக்கா... அன்னலட்சுமி அக்கா... உங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு "

" யாரு ராசா..? "

" வேற யாருக்கா... உம்மகன் குமார் தான் பணம் அனுப்பிருக்கான் "

" கொஞ்சம் படிச்சு சொல்லு ராசா "

" அன்புள்ள அம்மாவிற்கு. ...

நான் இங்கு நலம்.. என் மேனேஜர்  , என்னை பெங்களூரில் உள்ள பெரிய நிறுவனத்திற்கு மாற்றல் செய்துள்ளார்... சம்பளமும் அதிகம்.. நான் ஊருக்கு வருவதற்கு 10 வருடங்கள் கூட ஆகலாம்.. எனவே கவலை கொள்ள வேண்டாம். .  இத்துடன் இம்மாத சம்பளம் 25,000 இணைத்துள்ளேன்.. மாதாமாதம் பணம் அனுப்புகிறேன்.. . உடம்பை கவனித்து கொள்ளுங்கல். . தங்கை திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கள்.. என்னால் வரமுடியாத நிலை...

என்றும் அன்புடன் , உங்கள் மகன் குமார்... "

மணியார்டரை வாங்கி கொண்டு சந்தோஷத்துடன் உள்ளே ஓடினார்...

" எம்புள்ள நல்ல நிலைக்கு வந்துட்டான். .. இனி என் குடும்பம் கரை ஏறிடும் " என்று ஆனந்தகண்ணீர் வடித்தாள் அன்னலட்சுமி. .

அதேநேரம் , நியூஜெர்சி யில் ஏதோவொரு இடத்தில ஒரு பெண்ணும் அழுது கொண்டிருந்தாள். .. அது ஆனந்தகண்ணீர் அல்ல... காதலை இழந்த தவிப்பு. ..

முற்றும்

Tuesday, 9 June 2015

கவுண்டமணியும் , என் கம்பெனி நண்பர்களும்

நம்ம குழும நண்பர்களே. ... இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. ....சும்மா ஒரு கற்பனை. . அவ்வளவுதான் பா. ..

நம்ம கவுண்டரோட "ஆல் இன் ஆல் அழகுராஜா"  கடைக்கு ஆட்கள் தேவை னு விளம்பரம் போட்டிருக்காறு... அத படிச்சிட்டு , நம்ம கம்பெனி நண்பர்கள் வேலை கேட்டு போறாங்க....

கவுண்டர் : ஏன்டா பிசாசு மண்டையா... விளம்பரம் குடுத்தா "ஓஹோ " னு வருவீங்க னு சொன்ன... ஒரு நாய் கூட கடை பக்கம் எட்டி பாக்க மாட்டேங்குதடா ...

செந்தில் : அண்ணே. ...!! அங்க பாருங்க னே .. யாரோ மொபைல நோண்டிகிட்டு , நம்ம கடை பக்கம் வராங்க. ..

கவுண்டர் : யார்ரா இவன்... அவசரத்துல செஞ்ச அதிரசம் மாதிரி. ..

(வேலை கேட்டு நஜீப் வருவருகிறார் )

நஜீப் : job vacancy  இருக்கா ?

( கவுண்டர் , செந்திலிடம் மெதுவாக )

டேய்... என்னடா  இவன்.. தஸ் புஸ்ஸு னு பேசுரான் ... பெரிய படிப்பாளி போல டா. ..

செந்தில் : அப்படி தான் போல னே...

கவுண்டர் : அய்யா கு என்ன மாதிரி வேலை வேணுமுங்க. .. ?

நஜீப் : எனக்கு தனி ரூம் வேணும் , 24 மணி நேரமும் நெட் இருக்கனும் , கைல கறை பட கூடாது. .. முக்கியமான விஷயம் .. லிமிட் சுவிட்சுனு எதையும் என் கண்ணுல காட்ட கூடாது !!!

கவுண்டர் : அப்படிங்களா...!! அப்படியே கொஞ்சம் இப்படி வா........

ஙொங்கமக்கா....

( எட்டி ஒரு உதை விடுகிறார் )

செந்தில் : அண்ணே. ... எவனோ ஒருத்தன் தரைய பாத்துகிட்டே நடந்து வரான் னே...

( சுபாஷ் வேலை கேட்டு வருகிறார் )

கவுண்டர் : டேய்... கொஞ்சமா முடி மொளச்சி  , கொஞ்சமா முடி மொளைக்காத மண்டையா ...!! சுவத்துல மோதிக்க போற... உள்ள வா நாயே...

சுபாஷ் : ஹலோ. ... நான்   DME  படிச்சிருக்கேன். .. கொஞ்சம் மரியாதையா பேசுங்க. ..

கவுண்டர் : ஏன்டா பீர்க்கங்காய் மண்டையா .... அவனவன் BE படிச்சிட்டு பிச்ச எடுக்குறான் ...நீ DME படிச்சிட்டு லவுட்ட பாரு.... சரி... என்ன மாதிரி வேலை தெரியும் உனக்கு ?

சுபாஷ் : என்ன சுத்தி நிறைய தங்கச்சிங்க  இருக்குற மாதிரி ஒரு வேல போட்டு குடுங்க ....

கவுண்டர் : டேய்ய்ய்... என் பக்கத்துல பாத்தியா ? நல்லா கருகரு னு கருஞ்சட்டை கலர்ல ஒருத்தன் இருக்கான் ... அவன ஏவி விட்டேன் , உடம்புல முக்கா கிலோ கறி காணாம போயிரும் ... ஓட்ராரா  ...

( திவ்யாவும் , மகாவும் வராங்க )

கவுண்டர் : ஐ.....  லேடீஸ். .. லேடீஸ். ..

செந்தில் : எண்ணனே... திடீர்னு தெம்பா ஆகிட்டீங்க ?

கவுண்டர் : அங்க பார்ரா... நம்ம கடைக்கு பொண்ணுங்க வராங்க !!!

வாங்கோ... வாங்கோ... உங்களுக்கு என்ன மாதிரி வேலை வேணுமுங்க ?

திவ்யா : நானும் என் பிரண்டும் பேசிகிட்டே நடப்போம்... அதுக்கு ஒரு 10 ஏக்கர் நிலம் இருக்கனும். .. அப்புறம் போர் அடிச்சா அரைக்க , ஒரு கிரைண்டரும் 2 கிலோ அரிசியும் இருக்கனும் ... அப்படி ஒரு வேலை குடுங்க. ..

கவுண்டர் : ஆஆஆ. ... அம்மா தாயே. ... மக்கள பெத்த மகராசி..!! இன்னைக்கி காலைல தெரியாத்தனமா , இந்தா பக்கத்துல ஒரு பன்னி பம்பிட்டு நிக்குதே. .. அது மூஞ்சில முழிச்சிட்டேன்... அதுக்காக இப்படியா மா... நீங்க போய்ட்டு வாங்க தாயி...

( கடைசியாக நம்ம பிரஷாந்த் வரார் )

கவுண்டர் : டேய் பச்சிலை புடிங்கி .... இது ஆவுரதில்ல டா...

செந்தில் : இருங்கண்ணே.... அடுத்து வர ஆளு , எப்படியும் செம கிராக்கி யா இருக்கும் னு என்னோட உள் ஞானம் சொல்லுது னே....

கவுண்டர் : ஏன்டா டிபன்பாக்ஸ்  தலையா ... எங்களுக்களாம் அறிவு , அறந்து வெளியவா தொங்குது ? நீ வீட்டுக்கு வா பேசிக்கிறேன்...

பிரஷாந்த் : ஹாய். ...

கவுண்டர் : தம்பிய பாத்தா , ரொம்ப அமைதி டைப்பா தெரியுது ...

பிரஷாந்த் : ஆமாங்க... என்னோட Face cut யே அப்படித்தான். ...

கவுண்டர் : அய்யோ. .. இது சாதாரண மூஞ்சா ? எப்பேர்பட்ட மூஞ்சி. ....!!! காலைல வேலைக்கு போறவன் இந்த மூஞ்ச ஒரு முறை பாத்துட்டு போனா போதும் ...

(த்துத்துது....)

அன்னிக்கு பொழுது விளங்கி வீடு விட்டு போயிடும் ...

பிரஷாந்த் : சரி விடுங்க. .. வேலை டீட்டியல் பத்தி பேசனும்... அந்த கொட்டாய் குள்ள வரீங்களா ?

கவுண்டர் : உன்ன பாத்தா காத கடிச்சி வக்கிறவன் மாதிரியே இருக்க.. எதுக்கும் தள்ளி நின்னு பேசனும். .. சரியா..?

( கவுண்டரும்  பிரஷாந்தும் 3 மணி நேரம் கழித்து வெளியே வருகிறார்கள். .. கவுண்டர் மட்டும் காதை பிடித்தபடி தள்ளாடி வந்து உட்காருகிறார்  )

செந்தில் : மூனு மணி நேரமா அப்படி என்னனே பேசுனீங்க ?

கவுண்டர் : ஏன்டா. .. அவனுக்கு இருக்குறது வாயா இல்ல வரைஞ்சி எடுத்தாந்தானா னு தெரியல டா...

செந்தில் : எண்ணனே ஆச்சி ?

கவுண்டர் : ஆஆஆ ஆஆ. ....

உள்ள போயி உக்காந்தது தாண்டா தெரியும் ... அப்புறம் அவன் பேச , நான் கேக்க - நான் கேக்க , அவன் பேச ..... ஷ்ஷ்ஷ். .. கண்ண கட்டுதுடா சாமி....

கடை ஒரு வாரத்துக்கு லீவு டா...

Tuesday, 2 June 2015

அமெரிக்க டூ சைதாப்பேட்டை : பாகம் 3

பாகம் ஒன்று

பாகம் இரண்டம்

பாகம் - 3

சற்று திடுக்கிட்டு தான் போனாள் கேத்ரின். . யாருக்கு தான் இருக்காது ? முன்பின் தெரியாத ஊரில் தன் கண்களுக்காக ஒரு கும்பல் துரத்துகிறது என்றால். ... அவளது பயத்தை பசி வென்றதால் , பயத்திலேயே ரோட்டுகடை சாப்பாடை சாப்பிட்டு கொண்டிறுந்தாள்....

"எனக்கு என்னவோ , உன்ன யாரோ கண்கானிக்குறாங்க னு நினைக்கிறேன்" என்று சொல்லியவாறே கையை கழுவி கொண்டிருந்தான் குமார். .. இரவு நேரமாதலாள் , அதிவேகத்தில் ஒரு கார் இவர்கள் இருக்கும் திசையை நோக்கி வருவதை கவனித்தான். . சரேலென ஏதோ பொறிதட்டியது போல கேத்ரினை இழுத்து கொண்டு ஓடினான்
.. பாவம்.. பசியிலிருந்த கேத்ரின் தட்டை கீழே போட்டு விட்டு அவனுடன் ஓடினாள். .. கடைக்காரன் "டேய்ய். .. பணம்... பணம் குடுத்துட்டு போ டா " என கத்தியது அவர்கள் காதில் விழுந்ததோ என்னவோ... அதற்குள் சாலை ஓரமாக ஒரு புதரில் மறைந்து கடையை கண்காணித்தனர். ..

கடையோரம் நிறுத்திய காரில் இருந்து திமுதிமுவென ரவுடிகள் இறங்கினர். ..

"டேய்... இந்த பக்கம் ரெண்டு பேரு வந்தாங்களா ?"

" ஆமா எசமான் ... பணம் குடுக்காம ஓடிட்டாங்க " பயந்த படி சொன்னான் கடைக்காரன். ..

"டேய். .. இந்த இடம் புல்லா தேடுங்கடா.. அதுங்க இங்க தான் இருக்கும் "

ரவுடிகள் அந்த இடத்தை அலசி ஆராய்ந்தனர்... ஒருவன் குமார்,  கேத்ரின் இருந்த புதரின் அருகே வந்து மொபைளில் இருந்த டார்ச் ஐ அடித்து பார்த்தான். . பழைய மாடல் மொபைல் ஆதலால் வெளிச்சம் அவ்வளவாக இல்லை. . அவர்கள் இருந்தது தெரியாமல் திரும்பி விட்டான். ..

அந்த முரடனுக்கு ஒரே குழப்பம். .. போனை எடுத்து யாருக்கோ டயல் அடித்தான் அவசரமாக. ..

"ஹலோ.... சார்..?"

(--------)எதிர்முனை

"அதெல்லாம் இல்லை சார். .நானெல்லாம் மாட்டுவனா ? பிரச்சினை அதில்ல சார். . நீங்க சொன்ன இடம் கரெக்டா சார் ? "

(--------)எதிர்முனை

"ஆனா .. அவங்க இங்க இல்ல. . நல்லா தேடி பாத்துட்டோம் "

(-------)எதிர்முனை

"ம்ம்ம்ம். .. சரி சார். . அங்க போய் வெயிட் பண்றோம் "

( call Ended. ...)

இப்போது கண்களில் நரித்தனம் மின்ன , அந்த முரடன் , தன் ஆட்களை ஏற்றி கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினான். ..

---/-----/-----/---/

தன்னை சுற்றி ஏதோ ஒரு சதிவலை இருகுவதை கண்டாள் கேத்ரின். .. பயத்துடன் குமாரை பார்த்து கொண்டிருந்தாள். . குமார் ஏதோ சிந்தித்து கொண்டிருந்தான். . திடீரென அவளிடம் திரும்பி , " நீ ... இந்த ரவுடிகளை எப்போலாம் பார்த்த ? கொஞ்சம் சொல்லு.."

சுருக்கமாக எடுத்துரைத்தாள் கேத்ரின். . இப்போது குமார் தெளிவடைந்தான்..

"உடனே உன்னுடைய மொபைல் பேட்டரி ய கழட்டு. .. சிம் கார்டை உடைச்சு போடு .. சீக்கிரம் "

" ஏன்..?"

" இவ்ளோ நேரம் இத வச்சு தான் நம்ம இடத்தை கண்டுபிடிச்சிருக்காங்க.. சீக்கிரம் உடை.."

அவன் சொன்னது போலவே உடைத்தாள்.. "நீ எப்படி சொல்ற ? "

" உன்னை கண்கானிக்குற அந்த ஆள " X " னு வச்சிப்போம்.. அவன் , நீ உங்க ஊர்ல அதாவது நியூ ஜெர்சி ல இருக்குற வரைக்கும் கண்கானிச்சிருக்கான்.. நீ பிளைட் ஏறின பிறகு , உன் மொபைல்  flight mode ல இருந்ததால ஏதும் பண்ண முடியல.. நீ எங்க ஊருக்கு வந்ததும் , திரும்ப அவன் கண்கானிப்புல இருந்த.. அப்போ தான் உன்ன கொல்ல லாரி ல வந்து இடிச்சிருக்காங்க.. தெய்வதீனமா நீ தப்பிச்சிட்ட... ஆனா உன்னுடைய மொபைல் பேட்டரி கழண்டு விழுந்திடுச்சி... so , திரும்பவும் அவனோட தொடர்பு கட் ஆகிடிச்சி. . அதனால தான் நீ யாரோட இடைஞ்சலும் இல்லாம ஒரு ஹோட்டலுக்கு போயி ரூம் புக் பண்ணிருக்க.. அங்க நீ பண்ண தப்பு , திரும்பவும் மொபைல ஸ்விட்ச் ஆன் பண்ணது... திரும்பவும் உன்னை அந்த " X " கண்டுபிடிச்சி , ஆட்களை அனுப்பிட்டான்.. இப்போ வரைக்கும் நாம போற இடத்துல கரெக்டா வரானுங்க... இப்போ புரியுதா ? "

ஆபத்து பலமடங்கு இருப்பது மட்டும் தெரிந்து , புரிந்தது போல தலை அசைத்தாள்..

"சரி குமார். . நான் என்னுடைய அப்பா ரிச்சர்ட் இறந்த இடத்திற்கு போகனும் .. உதவரியா ? "

சந்தோஷமா தலை அதைத்தான். . அதை ஆமோதிப்பது போல அவன் போன் சிணுங்கியது. ..

"ஹலோ "

" டேய்ய். . நாயே. .!! உனக்கு வேலை வாங்கி தர , என்னோட வேலைய விட்டு வந்தேன்.. அம்போனு விட்டுட்டு எங்கடா போன.? " கோபத்தில் கொப்பளித்தான் ஜகா. .

" மச்சி. .. என்னென்னமோ நடந்திடுச்சிடா " நடந்ததை கூறினான் குமார். .

" டேய்... தேவை இல்லாத வேலை டா... உங்க அம்மா , இந்த மாசம் சம்பளம் வரும் னு இருக்காங்க .. உனக்கு வேலை போனது கூட தெரியாது டா அவங்களுக்கு.."

" மச்சி. . எனக்கு புரியுது டா.. பாவம். . ஒரு பொண்ணோட உயிர் பிரச்சினை. . அதான். .."

" டேய். .. என்னடா சொல்ற. . வேணாம் டா... டேஞ்சர் "

" பாத்துக்கலாம் மச்சி. . "

பின்பு .. கேத்ரினை கூட்டி கொண்டு , அவள் குறிப்பிட்ட ஹோட்டலை அடைந்தனர். .. ஹோட்டலின் 7 வது மாடியில் தான் தீ விபத்து நடந்தது. . அவளது அப்பா இறந்த இடம்.. இரவு நேரமாதலாள் செக்யூரிட்டி சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தனர். . எந்த வித அடையாளமும் இல்லாமல் உள்ளே செல்வது சாத்தியமில்லை. .பின்பக்க பைப்பை பிடித்தவாறே முதல் மாடி ஏறினர்.. பின்னர் லிப்டில் 7 வது மாடிக்கு சென்றனர். . அங்கு தன் தந்தை தங்கியிருந்த அறையை தேடினர்..

" POLICE LINE. .. DON'T CROSS "  மஞ்சள் நிற டேப் அவர்களை எதிர்த்தது. .. குமாரும் கேத்ரினும் சுற்றுமுற்றும் பார்த்தனர்....

யாருமில்லை. ..

உள்ளே நுழைந்து , எல்லா இடத்திலும் தேடினர்.. மொத்தமும் தீயின் நாக்கு பட்டு கருகி இருந்தது... கேத்ரின் அப்படியே நிலைதடுமாறி உட்கார்ந்தாள்...

" இங்க தான் என்னோட அப்பா எரிஞ்சு செத்தாருல்ல..." அடக்கமாட்டாமல் அழுதால். .

" அழாதே. .. பிளீஸ். . முடிஞ்சத பத்தி கவலைபடாத. . நடக்க போறத பாரு.." ஆறுதலாக அவளை தூக்கி நிறுத்தினான் குமார் ...

கேத்ரினும் , ஒரு பெரிய பெட்டியின் மீது தாங்கி நின்றால். .. திடீரென. ..

அவள் கை வைத்திருந்த இடத்தில் பச்சை நிற ஒளி அடித்தது ... என்னவென்று உற்று கவனித்தாள்.. ஒரு சிகப்பு நிற ஒளி கீற்றாக பாய்ந்தது. .

சரேலென அந்த பெட்டி திறந்தது.. உள்ளே நெருப்பு படாமல் , புதிதாக இருந்தது.. அதன் உள்ளே இருந்ததை எடுத்து பார்த்தாள் கேத்ரின். ..

" Oh my god..."

அதை கீழே போட்டு விட்டு , குமாரை நோக்கி ஓடினாள். .. அந்த பெட்டியினுள்.....

தொடர்ச்சி அடுத்த பாகத்தில். ..

( அடுத்த பாகத்தில் நிறைவடையும் )

Friday, 1 May 2015

Love story - part 1

This is a Cute love story!!!!… surely it will hit you!!!… enjoy it!!!!…
>
>
> We are planning to go for a movie on Saturday. How many of you would be
interested?" one Thursday end of the day, our class rep asked this. All of
us raised our hands except Nethra. He said, "Okay, interested people,
please bring 120 bucks tomorrow so we can book the tickets as fast as we
can" All of us tapped our desks with joy. It had been two months since we
joined college and we knew each other in the class by their names and our friendship' gang started to build up. There was lot of fun during class and off class hours. All of us started to go out for movies, restaurants,
birthday parties etc, except her.
>
> Nethra used to be alone and aloof always. She used to sit in the last bench
and never spoke with anyone. All the other students were scared to talk to her as she was grumpy and a cranky person. She had displayed her anger many a times with other students. She was good looking but I think she would
look beautiful if she smiled because no one had ever seen her smiling. Her
pet name was "Miss. Long Face". None of us in the class liked her but she
used to do her assignments and record works promptly and had a good name
among the lecturers. She was good at studies too and class topper while I used to rank from 4 to 7.
>
> One day as usual all the boys in the class were discussing about the girls in the college; when the topic went on her. One boy said, "I pity her husband he is gonna have tough time with this girl". Another boy said, "The person who makes her smile will be an extraordinarily talented person
because she is such a bad tempered girl" One jumped up and said, "Is there anybody who is ready for a challenge?" Everyone asked "what will be the challenge and the bet?" He said, "1000 bugs" "What's the challenge?"
> everyone asked. He said, "The challenge is to befriend to Miss. Long face".
> Since the bet and challenge was attractive I was interested in trying it;
so I took up the challenge.
>
> I thought of a plan to befriend her and as per my plan I did not attend the entire day's class the next Monday. On Tuesday when I went to class I asked my friends, "What were the assignments or records that were given yesterday?" They said, "The Chemistry record need to be completed till date and the deadline to submit for corrections is on Friday" I said, "Oh, just three days for Friday. Has anybody completed the record?"
>
> They said, "No, not yet. We have lot of experiments pending to be completed"
>
> I went to her and said, "Hi Nethra"
>
> She was writing something and when she heard me, she raised her head and
looked at me sternly and asked, "What?"
>
> I asked, "Have you completed the chemistry record?"
>
> Sternly she said, "Yes"
>
> I said, "I did not attend the last chemistry class and I heard that we need to submit the record by this Friday. Nobody else in the class has completed it so it would be great if you could lend me your record. I'll return it tomorrow" With lots of hesitation she gave me the record and in a warning
> tone she said, "Handle it carefully and return it tomorrow without fail"
>
> I took the record notebook from her and intentionally left it at home on the day I promised to return back in order to develop friendship. I was so impressed by the way she has maintained it. Her handwriting was beautiful and the highlighting & markings, presentation of the record was mind
blowing. I liked her record and I liked her too, but she was a mystery. I
was curious to find out the secret behind her callous nature.
>
> On Wednesday she asked me, "Where is my record?"
>
> "Your presentation skill is very impressive" I said.
>
> She asked, "Where is my record?"
>
> "I complimented about your record" I said
>
> She said, "I don't need your compliment, I need my record?"
>
> "I didn't complete it yet, shall I give it tomorrow?" I asked
>
> "I need it by tomorrow without fail" furiously she said and turned to leave
> my desk.
>
> "Can you remind me in the morning so I won't forget? Please and this is my number" saying this I wrote my number on a piece of paper and gave it to her as she was about to leave.
>
> She plucked the paper and walked off rapidly without saying anything. I knew this was the right way to get her number.
>
> On Thursday morning she called me early in the morning and said, "Nethra
here, called you to remind about the record book" saying this she disconnected the call.
>
> As soon as I came to the class she asked, "My record book"
>
> I searched my bag and hit my head and said, "Oh I am sorry, it's not there in my bag, I forgot to bring it. Give me your address after the class I
will bring it to your home"
>
> She said, "I know you'll do like this. Irresponsible fellow, that's why I hesitated to give it, Okay I will wait near the college entrance in the evening bring it to the college"
>
> I said, "It will be late and you have to wait for a long time. My home is far away and it is my fault so I will bring it to your home"
>
> Stubbornly she said the same thing again, "I will wait near the college
> entrance till you get it. Around what time will be here?"
>
> I said, "6. 30 pm"
>
> She said, "I'll wait in the library till you reach the college. Once you reach the college give me a call and then I'll come out"
>
> I said, "Okay, sounds good"
>
>
> Will he came back with the record notebook??....
>
> To know it wait for some time…. Until then bye…..
> !!!!!!!!!
Ends episode 1….

Episode 2 .. wait :)